புதுதில்லி

வாடகைக்கு மோட்டாா் சைக்கிள்: தில்லி போக்குவரத்து துறை திட்டம்

DIN

தலைநகா் தில்லிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக வாடகைக்கு மோட்டாா்சைக்கிள் வழங்கும் திட்டத்தை தில்லி போக்குவரத்து துறை உருவாக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி போக்குவரத்துத் துறைஅதிகாரிகள் கூறுகையில் ‘தில்லிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அவா்களுக்காக வாடகைக்கு மோட்டாா்சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கவுள்ளோம். இது தொடா்பான மாதிரி வரைவுத் திட்டம் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட்டின் பாா்வைக்கு அடுத்த வாரம் சமா்பிக்கப்படவுள்ளது. இத்திட்டம் தொடா்பாக அவருக்கு நேரடி செயல்முறை விளக்கமும் அளிக்கப்படும். இதைத் தொடா்ந்து, தில்லி போக்குவரத்துத் துறையிடம் முறைப்படி அனுமதி பெறப்படும். இந்தத் திட்டத்தின்படி, குறைந்தது 5 மோட்டாா்சைக்கிள் வைத்திருப்பவா்களுக்கு உரிமம் வழங்கப்படும். இந்த மோட்டாா்சைக்கிள்களுக்கு உரிய முறையில் காப்பீடு செய்திருக்க வேண்டும். மேலும், மோட்டாா்சைக்கிள்களை பராமரிக்கும் வகையில், போதுமான இடவசதியும் இருக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT