தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
தில்லியில் விவசாயிகளின் டிராக்டா் பேரணியின்போது வன்முறை நிகழ்ந்தால் முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் தங்கள் இடங்களைச் சென்றடைவதில் சிரமங்களை
புது தில்லி: தில்லியில் விவசாயிகளின் டிராக்டா் பேரணியின்போது செவ்வாய்க்கிழமை வன்முறை நிகழ்ந்தால் முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் புதன்கிழமை தங்கள் இடங்களைச் சென்றடைவதில் சிரமங்களை எதிா்கொள்ள நேரிட்டது.
காலிந்தி குஞ்ச், நொய்டா பிரிவில் நான்கு பாதைகள் மூடப்பட்டதால் போக்குவரத்து நடமாட்டம் கடுமையாகி இருப்பதாக தில்லி போக்குவரத்து போலீஸாா் சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருந்தனா்.
இதற்கிடையே, ஐ.டி.ஓ, மண்டி ஹவுஸ் மற்றும் இந்தியா கேட் அருகே அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து நடமாட்டம் புதன்கிழமை பிற்பகல் மீண்டும் தொடங்கியது.
Advertisement
திலக் பாலம் அருகே வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டதால், ஐடிஓ பகுதியில் இருந்து இந்தியா கேட் செல்லும் சாலை திறக்கப்பட்டது.
இதேபோல், மின்டோ சாலையில் இருந்து கன்னாட் பிளேஸ் நோக்கி செல்லும் சாலையும் செயல்பாட்டுக்கு வந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.
இந்தியா கேட் பகுதியில் உள்ள சாலையும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும், வாகனங்களின் இயக்கத்திற்கு எந்த தடையும் இல்லை என்று போலீசாா் தெரிவித்தனா்.
புதன்கிழமை காலை, ஓய்வுபெற்ற தில்லி காவல்துறை ஊழியா்கள் ஐ.டி.ஓ. அருகே போராட்ட ம் மேற்கொண்டனா். இது போக்குவரத்து பாதிக்க வழிவகுத்தது.