முகப்பு
தமிழ்நாடு

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான செய்திகள் தினமணி இணையத்தில் நேரலையில்...

Updated On : 9 ஏப்ரல், 2026 at 4:31 AM
புதுவை வாக்குப்பதிவு
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 4:21 AM

பைக்கில் வந்து வாக்களித்த ரங்கசாமி

புதுவை முதல்வர் ரங்கசாமி இருசக்கர வாகனத்தில் வந்து வாக்கு செலுத்தினார். திலாஸ்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

Updated On : 9 ஏப்ரல், 2026 at 4:18 AM

9 மணி நிலவரம் - 17.41% வாக்குப்பதிவு

புதுச்சேரி சட்டப்பேரவையில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி, 17.41 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கேரளத்தில் 16.23 சதவிகிதம் மற்றும் அஸ்ஸாமில் 17.87 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.

Advertisement

Updated On : 9 ஏப்ரல், 2026 at 3:10 AM

தனித்துவமான வாக்குச்சாவடிகள்

காரைக்கால் மாவட்டத்தில் பசுமை பார்வையில் தனித்துவமான வாக்குச் சாவடி, பிங்க் நிற வாக்குச் சாவடி, மகளிர் மட்டும் பணியாற்றக்கூடிய வாக்குச் சாவடிகள் என தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் பல தொகுதிகளில் தனித்துவமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

காரைக்காலில் அமைக்கப்பட்டுள்ள பசுமை வாக்குச்சாவடி
Updated On : 9 ஏப்ரல், 2026 at 3:08 AM

காரைக்காலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்கால் மாவட்டத்தில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

காரைக்கால் மாவட்டத்தில், காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி - திருப்பட்டினம், திருநள்ளாறு, நெடுங்காடு ஆகிய 5 பேரவைத் தொகுதிகள் உள்ளன.

பேரவைத் தேர்தலையொட்டி மாவட்டத்தில் 181 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி முதல் மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குப் பதிவு செய்துவருகிறார்கள்.

காரைக்காலில் வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள்
Updated On : 9 ஏப்ரல், 2026 at 2:44 AM

தனித்துவமான வாக்குச்சாவடி 

புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வாக்குச் சாவடி, பாரம்பரியத்தையும் வரலாற்றையும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. வருவோர் அனைவருக்கும் இருக்கை. டோக்கன் முறையில் அழைப்பு. முதலில் 50 டோக்கன். வாக்கு செலுத்த வந்தோருக்கு பூக்கள் கொடுத்து வரவேற்பு...

டோக்கன் கொடுத்து அமர வைக்கப்பட்டிருக்கும் வாக்காளர்கள் - DIN
Updated On : 9 ஏப்ரல், 2026 at 2:17 AM

புதுவை பெண்களுக்கு மோடி வேண்டுகோள்

பிரதமர் மோடியின் எக்ஸ் தளப் பதிவு: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்கள் தொடங்கும் வேளையில், வாக்காளர்கள் அனைவரும் பெருமளவில், முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக, நமது இளைஞர்களும் பெண் வாக்காளர்களும் ஜனநாயகச் செயல்முறையை வலுப்படுத்த முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். புதுச்சேரியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது எனப் பதிவிட்டுள்ளார்.

Updated On : 9 ஏப்ரல், 2026 at 1:56 AM

பெண்களே நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள்

புதுச்சேரியில் பெண்களே நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதிக்கு ஒன்று என அமைக்கப்பட்டுள்ள, 30 மகளிர் வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

Updated On : 9 ஏப்ரல், 2026 at 1:51 AM

காத்திருந்து வாக்களிக்கும் மக்கள்

புதுச்சேரி வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கோடை வெய்யிலைத் தவிர்க்கும் வகையில் காலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு குடிநீர், கழிப்பறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Updated On : 9 ஏப்ரல், 2026 at 1:49 AM

ராஜ்பவன் தொகுதியில் பசுமை வாக்குச்சாவடி

ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட வ.உ.சி. பள்ளியில் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஓலைகள், தோரணங்கள், இலைகள் கொண்டு வாக்குச்சாவடி அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை குறைந்த எண்ணிக்கையில் வாக்குகள் பதிவான நிலையில், இம்முறை வாக்குகளை அதிகரிக்கும் நோக்கத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Updated On : 9 ஏப்ரல், 2026 at 1:42 AM

30 தொகுதிகளில் வாக்குப் பதிவு

யூனியன் பிரதேசத்தின் 30 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. என். ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக களம் காண்பதால் இங்கு கடும் போட்டி நிலவுகிறது. சுமார் 9.50 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர்.

Updated On : 9 ஏப்ரல், 2026 at 1:29 AM

புதுவையில் இன்று வாக்குப் பதிவு

summary

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 9.50 லட்சம் வாக்காளர்கள் (ஆண்கள் 4,46,667, பெண்கள் 5,03,832, மூன்றாம் பாலினத்தவர் 140) வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments