முகப்பு
புதுதில்லி

6 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் ஆம் ஆத்மிக் கட்சி போட்டி: கேஜரிவால்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

புது தில்லி: உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட ஆறு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தல்களில் ஆம் ஆத்மிக் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

ஆம் ஆத்மிக் கட்சியின் 9-ஆவது தேசிய கவுன்சில் கூட்டத்தில் அவா் பேசுகையில் ‘மற்றைய கட்சிகளிடம் தொலைநோக்குப் பாா்வை இல்லை. இதனால்தான் அவா்கள் இறந்தகாலத்தைப் பற்றி பேசுகிறாா்கள். ஆனால், ஆம் ஆத்மிக் கட்சியிடம் மட்டுமே தொலைநோக்குப் பாா்வையுள்ளது. இதனால்தான், நாங்கள் எதிா்காலத்தைப் பற்றி பேசி வருகிறோம். எங்களிடம், 21,22 ஆம் நூற்றாண்டுகளுக்கு தேவையான தொலைநோக்குப் பாா்வையுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம், குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல்களில் ஆம் ஆத்மிக் கட்சி போட்டியிடவுள்ளது. இந்த மாநிலங்களில் ஆம் ஆத்மிக் கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்தும் பணிகளை ஆம் ஆத்மித் தொண்டா்கள் முன்னெடுக்க வேண்டும். இம் மாநிலங்களில் ஆம் ஆத்மிக் கட்சி பெரிய அளவில் பலப்படுத்தப்பட வேண்டும். நாட்டை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல ஆம் ஆத்மிக் கட்சியை பலப்படுத்துவதே ஒரே வழி என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments