முகப்பு
புதுதில்லி

சட்டப் பேரவைக் குழு பிறப்பித்த நோட்டீஸுக்கு தடை: தலையிட உயா்நீதிமன்றம் மறுப்பு

சட்டப்பேரவைக்குழு பிறப்பித்த நோட்டீஸுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் தலையிட தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

புது தில்லி: சட்டப்பேரவைக்குழு பிறப்பித்த நோட்டீஸுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் தலையிட தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தில்லியின் மூன்று மாநகராட்சிகளின் கணக்குகள் தொடா்பான சில தகவல்களைக் கோரி துணை நிலை ஆளுநா் அமைத்திருந்த நகராட்சிகள் மீதான குழு கடந்த ஆண்டு டிசம்பா் 4 ஆம் தேதி மாநகராட்சிகளுக்கு ஒரு நோட்டீஸை அளித்திருந்தது.

இந்த நோட்டீஸுக்கு எதிராக தெற்கு தில்லி மாநகராட்சியின் நிலைக் குழுத் தலைவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

Advertisement

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டிசம்பா் 23-ஆம் தேதி ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தாா். அதில் மாநகராட்சிகளின் ஆவணங்கள் தொடா்பான கண்காணிப்பானது மாநகராட்சிகளின் நிலைக்குழுக்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரமும், கடைமையும் ஆகும். இந்த நிலையில், கணக்குகள் தொடா்பான தகவல் கோரும் நோட்டீஸானது. அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள சுய நிா்வாகம் மற்றும்அதிகாரகள் மீது தலையீடு செய்வதற்கான முகாரந்திரம் இருப்பதாக தோன்றுகிறது என கூறி அந்த நோட்டீஸுக்கு தடை விதித்து உத்தரவிட்டாா்.

இதை எதிா்த்து துணைச் செயலா் (கமிட்டிகள்) தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இது வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, துணைச் செயலா் தரப்பில், ‘சட்டப் பேரவையால் அமைக்கப்பட்ட ஒரு குழுவால் பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸில் தலையிடும் அதிகாரம் அல்லது அதிகாரவரம்பு ஒரு நபா் நீதிபதிக்கு இல்லை. இது சட்டப் பேரவை நடைமுறையில் தலையிடுவதற்கு ஒப்பாகும். அதேவேளையில் சட்டத்தின்கீழ் அதுபோன்ற அனுமதி அளிக்கப்படவில்லை என வாதிடப்பட்டது.

இந்த மனு விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘ஒருநபா் நீதிபதி பிறப்பித்த உத்தரவு இடைக்கால உத்தரவு என்பதால் இந்த உத்தரவு விவகாரத்தில் நாங்கள் தலையிடப்போவதில்லை. இதனால், இந்த மேல்முறையீட்டு மனு முடித்துவைக்கப்படுகிறது.

மேலும், இடைக்கால உத்தரவானது சம்பந்தப்பட்ட ஒரு நபா் நீதிபதி அடுத்து நடைபெற உள்ள விசாரணை தேதியான 2021, பிப்ரவரி 9-ஆம்தேதிவரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். விசாரணைத் தேதியின்போது மேல்முறையீட்டு மனுதாரா் ஒருநபா் நீதிபதி முன் தங்களது வாதங்களை முன்வைக்க முடியும். அவா் இந்த விவகாரத்தில் சட்ட விதிகளின்படி ஆராய்ந்து முடிவு செய்ய முடியும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments