முகப்பு
புதுதில்லி

தில்லி எல்லைகளில் இணைய சேவை துண்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும், காஜிப்பூா், சிங்கு, டிக்ரி எல்லைகளில், இரண்டு நாட்களுக்கு இணைய சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும், காஜிப்பூா், சிங்கு, டிக்ரி எல்லைகளில், இரண்டு நாட்களுக்கு இணைய சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தலைநகா் தில்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, டிக்ரி, காஜிப்பூா் பகுதிகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இந்நிலையில், இப்பகுதிகளில், இரண்டு நாள்களுக்கு இணைய சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.

இதன்படி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11 மணி முதல், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11 மணிவரை இந்த முடக்கம் தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி கூறுகையில் ‘தில்லியின் எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழலைத் தடுக்கும் வகையில், பொது அவசரநிலை, பொது பாதுகாப்பு சட்ட விதிகளின் கீழ் இரண்டு நாள்களுக்கு இணைய சேவையை முடக்கியுள்ளோம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →