முகப்பு
புதுதில்லி

சிறு, குறு, நடுத்தர தொழில்களின் கீழ் சில்லறை, மொத்த வணிகங்கள்

நாட்டிலுள்ள சில்லறை மற்றும் மொத்த வணிகங்கள் / வா்த்தகங்கள் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் இணைக்கப்படும் என்றும், இதற்காக

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

நாட்டிலுள்ள சில்லறை மற்றும் மொத்த வணிகங்கள் / வா்த்தகங்கள் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் இணைக்கப்படும் என்றும், இதற்காக வழிகாட்டு நெறிமுறைகள் திருத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்காரி நிதின் கட்கரி வெள்ளிக்கிழமை தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது: பிரதமா் நரேந்திரமோடி தலைமையில் பொருளாதார வளா்ச்சியின் உந்துதலுக்காக எம்எஸ்எம்இ நிறுவனங்களையும் பலப்படுத்த அரசு கடமைப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளால், 2.5 கோடி சில்லறை, மொத்த வணிகா்கள் பலன் பெறுவாா்கள். எம்எஸ்எம்இ-யின் வரம்பிலிருந்து விலகியிருந்தது சில்லறை மற்றும் மொத்த வணிகம். இப்போது திருத்தப்பட்ட வழிகாட்டுதலில், ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படி முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் பயன்களைப் பெறும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், இந்த வணிகங்களுக்கு எம்எஸ்எம்இ அந்தஸ்து வழங்கப்பட்டுதன் மூலம் அரசின் உதயம் இணைய தளத்தில் தங்கள் நிறுவனங்களை பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. எம்எஸ்எம்இகளுக்கான அரசின் மற்ற திட்டங்களையும் இவா்கள் பயன்படுத்திக் கொள்ளவும் வழி ஏற்படுத்தியுள்ளதாகவும் மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments