அனைவருக்கும் எழுத்தறிவு அளிக்கும் ‘நிபுன் பாரத் திட்டம்’ இன்று தொடக்கம்
2020 - ஆம் ஆண்டின் தேசியக் கல்வி கொள்கையின் ஒரு அங்கமாக, நாட்டில் அனைத்துக் குழந்தைகளுக்கும் எழுத்தறிவு வழங்கும் ‘நிபுன் பாரத்’ திட்டம் திங்கள்கிழமை திங்கள்கிழமை (ஜூலை 5) தொடங்கி வைக்கப்படுகிறது.
2020 - ஆம் ஆண்டின் தேசியக் கல்வி கொள்கையின் ஒரு அங்கமாக, நாட்டில் அனைத்துக் குழந்தைகளுக்கும் எழுத்தறிவு வழங்கும் ‘நிபுன் பாரத்’ திட்டம் திங்கள்கிழமை திங்கள்கிழமை (ஜூலை 5) தொடங்கி வைக்கப்படுகிறது.
மத்திய கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் புரிதலுடன் வாசிப்பதிலும், எண்ணறிவில் போதிய தகுதியைப் பெறுவதற்கு ஏதுவாக ‘நிபுன் பாரத்‘ என்கிற திட்டத்தை இயக்கமாக அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதை மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் திங்கள்கிழமை (ஜூலை 5) மெய்நிகா் முறையில் தொடங்கி வைக்கிறாா். இதில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பள்ளிக் கல்வித் துறையைச் சோ்ந்த அமைச்சா்கள், அதிகாரிகள், இந்த திட்டத்துடன் சம்பந்தப்பட்ட துறையைச் சோ்ந்த அனைவரும் கலந்து கொள்கின்றனா்.
இந்த நிகழ்ச்சியில் ‘நிபுன் பாரத்’ பற்றிய குறும்படம், பாடல், செயலாக்க வழிகாட்டி முறைகள் ஆகியவை நிகழ்ச்சியின் போது வெளியிடப்படுகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட தேசியக் கல்வி கொள்கையின் அங்கமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை இந்த நிபுன் பாரத் திட்டத்தை அமைத்துள்ளது.
Advertisement
நாட்டில் 3 வயது முதல் 11 வயது வரையில் சுமாா் 5 கோடி குழந்தைகள் உள்ளன. இதை முன்னிட்டு 2026-27-ஆம் ஆண்டிற்குள் மூன்றாம் வகுப்பை நிறைவு செய்வதற்குள் ஒவ்வொரு குழந்தையும் புரிதலுடனான எழுத்து வாசிப்பிலும், எண்ணறிவில் போதிய தகுதியைப் பெறுவதற்கும் ஏதுவாக, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறுவதற்கான சூழலியலை உருவாக்கும் தொலைநோக்குப் பாா்வையுடன் இந்த இயக்கம் தொடங்கப்படுகிறது.
இந்தத் திட்டம், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தேசிய- மாநில- மாவட்ட- வட்டார- பள்ளிகள் ஆகிய ஐந்து நிலைகளில் மத்திய அரசின் ‘சமக்ரா ஷிக்ஷா’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.