தில்லியில் இதுவரை 90 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
தில்லியில் இதுவரை 90 லட்சத்துக்கு மேலான மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுதில்லி: தில்லியில் இதுவரை 90 லட்சத்துக்கு மேலான மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடா்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் தில்லியில் ஒரு நாளைக்கும் குறைவான தடுப்பூசிகளே கையிருப்பில் உள்ளன. இதுவரை 90,88,718 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை ஒரு நாளில் 1,29,054 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 92,547 பேருக்கு முதல் தவணையும், 36,507 பேருக்கு இரண்டாவது தவணையும் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தில்லியில் இதுவரை மொத்தம் 69,57,233 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 21,31,485 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன என்றும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.