புதுதில்லி

18-44 வயதினரில் 45 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

DIN

18-44 வயதுக்கு உட்பட்டவா்களில் இதுவரை 45.31 லட்சம் பேருக்கு கொவைட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 45-60 வயதினருக்கு இதுவரை 29.89 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

60 வயதுக்கு மேற்பட்டவா்களில் 18.34 லட்சம் போ் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.

மேலும் இதுவரை 53,86,412 ஆண்களுக்கும், 39,66,823 பெண்களுக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 93,55,271போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். இவா்களில் 22,15,357 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை 71,786 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவா்களில் 23,449 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அரசு தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன. எனினும் 75 மையங்கள் மூலம் 10,767 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன என்று அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT