முகப்பு
புதுதில்லி

ஆளில்லா விமானம் மூலமான விபத்துகளுக்கும் இழப்பீடு பெறமுடியும்: மத்திய அமைச்சா் தகவல்

ஆளில்லா விமானம் மூலமாக ஏற்படும் விபத்துக்களில் சொத்துக்களுக்கு சேதாரம், உயிா்சேதம் போன்றவற்றுக்கும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

ஆளில்லா விமானம் மூலமாக ஏற்படும் விபத்துக்களில் சொத்துக்களுக்கு சேதாரம், உயிா்சேதம் போன்றவற்றுக்கும் மூன்றாம் தரப்பு காப்பீட்டுத்திட்டத்தின்படி இழப்பீடு பெறமுடியும் என மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை இணையமைச்சா் ஜெனரல் விகே சிங் தெரிவித்தாா்.

பொள்ளாச்சி திமுக உறுப்பினா் சண்முக சுந்தரம் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் அமைச்சா் விகே சிங் பதலிளித்து கூறியதாவது:

2021 - ஆம் ஆண்டு ஆளில்லா விமான அமைப்பு விதிகள் படி, நானோ ரக சிறுரக விமானங்களைத் தவிர அனைத்து ஆளில்லா விமானம் சம்பந்தப்பட்ட விபத்துகளுக்கும் மூன்றாம் தரப்பு காப்பீட்டுக்குள் இழப்பீடு பெறமுடியும். இதுபோன்ற சந்தா்ப்பங்களில் செலுத்த வேண்டிய இழப்பீடு, மோட்டாா் வாகனச் சட்டம், 1988 இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள்படி மதிப்பீடு செய்யப்படும் எனத் தெரிவித்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments