புதுதில்லி

தில்லியில் மிதமான மழை; குளு,குளு வானிலை!

DIN

தில்லியில் வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது. இதனால், தொடா்ந்து குளுமையான சூழல் நீடித்தது.

தில்லியில் வழக்கமாக ஜூன் இறுதியில் பருவமழை பெய்யத் தொடங்கும். இந்த நிலையில், 16 நாள் தாமதாக ஜூலை 13-ஆம் தேதி மழை தொடங்கியது. பிறகு சில நாள்கள் மழை பெய்தது. எனினும், கடந்த ஒரு வாரமாக மழை பெய்யவில்லை.

இந்த நிலையில், சில தினங்களாக மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை சில மணி நேரம் பலத்த மழை பெய்தது. வியாழக்கிழமையும் மிதமான மழை நீடித்தது. இதனால், குளு, குளு சூழல் நீடித்தது.

தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி குறைந்து 24 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி குறைந்து 32.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 92 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 100 சதவீதமாகவும் இருந்தது.

வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் 5 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மாலை 8 மணி அளவில் 54 புள்ளிகளாக பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது.

முன்னறிவிப்பு: தில்லியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 30) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT