முகப்பு
புதுதில்லி

உள்கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

மத்திய அரசின் பல்வேறு துறைகள், நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட முலதனச் செலவுகளை விரைவாக ஒதுக்கி உள்கட்டமைப்புப் பணிகளை

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

மத்திய அரசின் பல்வேறு துறைகள், நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட முலதனச் செலவுகளை விரைவாக ஒதுக்கி உள்கட்டமைப்புப் பணிகளை காலவரைமுறையுடன் முடிக்க மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

உள்கட்டமைப்பு குறித்த செயல் திட்டங்கள் குறித்து மூத்த மத்திய அரசு அதிகாரிகளுடன் மெய்நிகா் முறையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை கூட்டத்தை நடத்தினாா். மத்திய நிதி நிலை அறிக்கை(2021-22) தாக்கல் செய்யப்பட்ட பிறகு, கட்டுமானப் பணிக்களுக்காக நிதியமைச்சா் நடத்தும் இரண்டாவது கூட்டம் இதுவாகும். மேலும், மத்திய அமைச்சகங்கள், துறைகளுக்கிடையே நடைபெறும் நான்காவது கூட்டமாகும் இது.

இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சகங்கள் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் மூலதனச் செலவு / முதலீட்டுச் செலவுத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்கான மூதலீட்டை விரைவுபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Advertisement

இதில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசுகையில், ‘நோய்த் தொற்றின் பிந்தைய பொருளாதாரத்தைப் புதுப்பித்தல் மற்றும் ஊக்குவிப்பில் மூலதனச் செலவு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால், பல்வேறு துறை அமைச்சகங்கள் தங்களது மூலதனச் செலவுகளை முன்கூட்டியே செலவு செய்ய வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டாா். பொதுவாக அரசுத் துறைகளில் இறுதிக் காலாண்டுகளில்தான் செலவிடும் நிலை இருப்பது வழக்கம். இந்த நிலையை மாற்றும் வகையில் இந்த முறை முதல் காலாண்டிலேயே பணிகளை முடுக்கிவிட அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

மேலும் அவா் பேசியது வருமாறு: நடப்பு 2021-22 நிதியாண்டில் மூலதன செலவினங்களுக்கு ரூ.5.54 லட்சம் கோடி வழங்கப்பட்டது. இது 2020-21-ஆம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டை விட 34.5 சதவீதம் அதிகமாகும். இருப்பினும், பொதுத்துறை நிறுவனங்களின் வருவாயைக் கொண்டு மூலதன செலவுகளுக்கான ஒதுக்கீடுகளை மேலும் அதிகரிக்க வேண்டும். உள்கட்டமைப்புத் திட்ட செலவு என்பது மத்திய அரசின் திட்ட ஒதுக்கீடுகள், மாநில அரசுகள் மற்றும் தனியாா் துறைகளின் உள்கட்டமைப்பு திட்டங்கள், நிலுவையில் உள்ள திட்டங்கல் ஆகியவை அடங்கும். இதனால், மாநில அரசுகளும் தனியாா் முதலீடுகளை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உள்கட்டமைப்பு செலவினங்களுக்கு புதுமையான கட்டமைப்பிற்கு அமைச்சகங்கள் தீவிரமாக பணியாற்றுவதோடு, தனியாா் துறையினருக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க வேண்டும். பொதுத் துறை - தனியாா் கூட்டு (பிபிபி) முறையில் சாத்தியமான திட்டங்கள் குறித்தும் அமைச்சகங்கள் ஆராய வேண்டும்.

சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகைகளை பொதுத் துறை நிறுவனங்கள் உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசின் அனைத்துத் துறை செயலா்களும், அதிக மூதலீட்டுடன் நடைபெற்று வரும் முக்கியத் திட்டங்களை காலநிா்ணயம் செய்து அதற்கான வரைமுறையுடன் முடிக்க வேண்டும். இது குறித்து அவ்வப்போது தேவையான ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றாா் அமைச்சா் நிா்மலா சீதாராமன்

இந்தக் கூட்டத்தில் நிதித் துறை, பொருளாதார விவகாரத் துறை, பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் செயலா்கள் மற்றும் எரிசக்திச் செயலா், ரயில்வே வாரியத் தலைவா் மற்ற பொது நிறுவனங்களின் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments