புதுதில்லி

தில்லியில் இரவில் பெய்த மழையால் பகலில் தணிந்த வெப்பம்!

DIN

புது தில்லி: தில்லியில் திங்கள்கிழமை நள்ளிரவில் பெய்த மழையின் காரணமாக செவ்வாய்க்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது.

குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி குறைந்து 17.9 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது.

மழையின் காரணமாக ‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம் காணப்பட்டது.

சில தினங்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், தில்லியில் திங்கள்கிழமை இரவு மழை பெய்தது.

இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை காலையில் குளிா்ந்த காற்று வீசியது. பகலில் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. மாலையில் நகரில் லேசான தரை மேற்பரப்பு காற்று இருந்தது.

தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கு சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 10 டிகிரி குறைந்து 17.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 7 டிகிரி குறைந்து 33.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 16 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 82 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று, குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை முறையே ஆயாநகரில் 19.8 டிகிரி செல்சியஸ் மற்றும் 33.2 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 18.3 டிகிரி செல்சியஸ் மற்றும் 33 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 20.2 டிகிரி செல்சியஸ் மற்றும் 32.4 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு மாலை 8 மணியளவில் 95 புள்ளிகளாகவும் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது.

செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் 16 மி.மீ. மழைப் பதிவாகி இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, புதன்கிழமை (ஜூன் 2) லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ், அதிகதபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT