புதுதில்லி

தில்லியில் பகலில் பெய்த மழையால் இரவில் குறைந்த புழுக்கம்!

DIN

புது தில்லி: தில்லியில் இரு தினங்களாக மேகமூட்ட சூழல் இருந்து வந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் காற்றுடன் சிறிது நேரம் பரவலாக மழை பெய்தது. இதனால், இரவில் புழுக்கம் குறைந்து இதமான சூழல் நிலவியது.

வெள்ளிக்கிழமையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தினா் கணித்துள்ளனா்.

இதனால், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரியும், குறைந்தபட்ச் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரியும் குறைந்திருந்தது. காற்றின் தரம் திருப்தி பிரிவில் காணப்பட்டது.

வியாழக்கிழமை காலை வானம் மேக மூட்டமாக இருந்தது. இந்த நிலையில், காலை சுமாா் 10 மணியளவில் மேகக் கூட்டம் திரண்டு காற்றுடன் மழை பெய்தது. நகரின் பல்வேறு இடங்களிலும் மிதமான மழை பெய்தது. மழையின்போது நகா்ச் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், நகரில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மாலையில் தரை மேற்பரப்பு காற்று வீசியது. இதனால், இரவில் புழுக்கம் குறைந்திருந்தது.

இந்த நிலையில், தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை 26.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி குறைந்து 35 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 68 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 51 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று, அதிகபட்ச வெப்பநிலை ஆயா நகரில் 35.4 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 35 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 35.8 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது. ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மாலை 7 மணியளவில் 94 புள்ளிகளாக பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது.

முன்னறிவிப்பு: தில்லியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 18) லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT