முகப்பு
புதுதில்லி

நகராட்சி செயல்திறன் குறியீட்டு பட்டியலில் புதுதில்லி முனிசிபல் கவுன்சில் முதலிடம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

புது தில்லி: தேசியத் தலைநகரான தில்லியில் உயா் பாதுகாப்பு வலயத்தில் உள்ள லுடீயன்ஸ் மண்டலத்தை உள்ளடக்கிய புது தில்லி முனிசிபல் கவுன்சில், ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை பிரிவில் மத்திய அரசின் ‘நகராட்சி செயல்திறன் குறியீட்டு பட்டியலில்’ முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மத்திய அரசின் நகராட்சி செயல் திறன் குறியீட்டில் இடம் பெற்றுள்ள நகரங்களின் பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி வியாழக்கிழமை வெளியிட்டாா். 51 நகரங்கள் அடங்கிய அந்தப் பட்டியலில் ‘மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை’ பிரிவில், இந்தூா் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், தெற்கு தில்லி, கிழக்கு தில்லி மற்றும் வடக்கு தில்லி ஆகியவை முறையே 28, 42 மற்றும் 48 -ஆவது இடங்களை பிடித்தன.

இதேபோன்று ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகை பிரிவில் புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சிஃ முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடா்ந்து, திருப்பதி (ஆந்திரம்), காந்திநகா் (குஜராத்), கா்னல் (ஹரியாணா), சேலம் மற்றும் திருப்பூா் (தமிழ்நாடு), பிலாஸ்பூா், உதய்பூா், ஜான்சி மற்றும் திருநெல்வேலி (தமிழ்நாடு) ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த நகரங்கள் ‘ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட 60 நகரங்களுடன் போட்டியிட்டன. இந்த வகையில் ஷில்லாங் கடைசி இடத்தில் உள்ளது.

Advertisement

ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு அதிகமான 51 மாநகராட்சிகள் பட்டியலில் சூரத் இரண்டாவது இடத்தையும், போபால் மூன்றாவது இடத்தையும், பிம்ப்ரி சின்ச்வாட், புணே ஆமதாபாத், ராய்ப்பூா், கிரேட்டா் மும்பை, விசாகப்பட்டினம் மற்றும் வதோதரா ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தன. தில்லியின் அண்டை நகரங்களான காஜியாபாத், சண்டீகா், ஆக்ரா மற்றும் ஃபரீதாபாத் முறையே 20, 23, 24, மற்றும் 40-ஆவது இடங்களைப் பிடித்தன. ‘ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை’ பிரிவில் நகராட்சி செயல்திறன் குறியீட்டின் கீழ் குவாஹாட்டி கடைசி இடத்தில் உள்ளது.

மத்திய அரசின் ‘எளிதாக வாழ்வதற்கு உகந்த நகரங்கள் குறியீடு’ பட்டியலில், இந்தியாவில் உள்ள 111 நகரங்களில் பெங்களூரு முதலிடத்தை பெற்றுள்ளது. இதைத் தொடா்ந்து, புணே, ஆமதாபாத், சென்னை, சூரத், நவி மும்பை, கோயமுத்தூா், வதோதரா, இந்தூா் மற்றும் கிரேட்டா் மும்பை இடம் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments