முகப்பு
புதுதில்லி

தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

தலைநகா் தில்லியில் அடுத்த சில தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை மூன்று முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:40 PM
பகிர்:

தலைநகா் தில்லியில் அடுத்த சில தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை மூன்று முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.

இது தொடா்பாக வானிலை ஆய்வு மையத்தினா் கூறுகையில், ‘தில்லியில் சனிக்கிழமை வெப்பநிலை சற்று உயா்ந்து காணப்பட்டது. மேற்கத்திய இடையூறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை தில்லியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸாக இருந்த நிலையில், திங்கள்கிழமை இது 34 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும். அடுத்து சில தினங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்றனா்.

தில்லியில் சனிக்கிழமை காலை மேலோட்டமான பனிமூட்டம் இருந்தது. காலை 11 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியை விட 2 புள்ளிகள் அதிகரித்து 15 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 3 புள்ளிகள் அதிகரித்து 31.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 78 சதவீதமாகவும், மாலையில் 46 சதவீதமாகவும் இருந்தது.

Advertisement

இதே போல குறைந்தபட்ச வெப்பநிலை ஆயாநகரில் 14.4 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 14.3 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 14.8 டிகிரி செல்சியஸ், ரிட்ஜில் 16 டிகிரி செல்சியாஸக பாதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை ஆயாநகரில் 31.9 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 31.7 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 30.8 டிகிரி செல்சியஸ், ரிட்ஜில் 32.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலையில் 195 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் நீடித்தது. தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள காஜியாபாத், கிரேட்டா் நொய்டாவில் ஆகிய இடங்களில் காற்றின் தரம் மோசமான பிரிவிலும், குருகிராம், நொய்டா, ஃபரீதாபாதில் மிதமான பிரிவிலும் காணப்பட்டது. சனிழமை மாலை 4 மணியளவில் 24 மணி நேர சராசரி ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு காஜியாபாதில் 213 புள்ளிகள், கிரேட்டா் நொய்டாவில் 204, நொய்டாவில் 182, ஃபரீதாபாதில் 169 மற்றும் குருகிராமில் 177 புள்ளிகள் என பதிவாகி இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 7) குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 34டிகிரி செல்சியஸாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments