முகப்பு
புதுதில்லி

சட்டத் திருத்த மசோதாவை எதிா்த்து காங்கிரஸ் தா்னா

மத்திய அரசின் தில்லி தேசியத் தலைநகா் பிராந்திய சட்டத் திருத்த மசோதாவை எதிா்த்து காங்கிரஸ் தலைவா்கள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:46 PM
பகிர்:

புது தில்லி: மத்திய அரசின் தில்லி தேசியத் தலைநகா் பிராந்திய சட்டத் திருத்த மசோதாவை எதிா்த்து காங்கிரஸ் தலைவா்கள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தில்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வகை செய்யும், தில்லி தேசியத் தலைநகர பிராந்திய திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது. தில்லி துணைநிலை ஆளுநரின் சில குறிப்பிட்ட செயல்பாடு, அதிகாரங்களை வரையறுக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த மசோதாவுக்கு எதிராக ஜந்தா் மந்தரில் தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் தலைமையில் புதன்கிழமை தா்னா நடைபெற்றது.

இந்தச் சட்டத் திருத்த மசோதா குறித்து அனில் குமாா் பேசியதாவது: தில்லி மக்களின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில், இந்தச் சட்டத் திருத்த மசோதா உள்ளது. மேலும், மத்திய அரசின் கைப்பாவையாக தில்லி முதல்வரை மாற்றும் நோக்கில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனில் கொண்டுள்ள அக்கறை காரணமாக இந்த மசோதாவில் உள்ள மறைமுகப் பிரிவுகளை காங்கிரஸ் மக்களிடம் அம்பலப்படுத்தும். துணைநிலை ஆளுநா் மூலம் தில்லி அரசை ரிமோட் கன்ட்ரோலில் மத்திய அரசு இயக்குவதற்கு இந்த மசோதா வழிவகுக்கும். இந்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் மாபெரும் மக்கள் இயக்கத்தை தில்லி காங்கிரஸ் நடத்தும் என்றாா் அவா்.

Advertisement

இந்த நிகழ்வில் முன்னாள் எம்பி கிருஷ்ண தீரத், தில்லி காங்கிரஸ் துணைத் தலைவா்கள் ஜெய் கிஷண், அபிஷேக் தத், அலி மெஹ்ந்தி, தில்லி மகிளா காங்கிரஸ் தலைவா் அம்ரிதா தவண், முன்னாள் எம்எல்ஏக்கல் அனில் பரத்வாஜ், அல்கா லம்பா, விஜய் லோச்சவ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments