முகப்பு
புதுதில்லி

ஜாமியா மிலியா மாணவா் தன்ஹாவின் ஜாமீன் மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
பகிர்:

புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஜாமியா மிலியா மாணவா் ஆசிஃப் இக்பால் தன்ஹாவின் ஜாமீன் மனு மீதான தீா்ப்பை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

இந்த விவகாரத்தை நீதிபதிகள் சித்தாா்த் மிருதுள், ஏ.ஜெ. பம்பானி அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது. தில்லி காவல்துறை, தன்ஹா தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, மாா்ச் 22-க்குள் இரு தரப்பினரையும் எழுத்துப்பூா்வ வாதங்களை தாக்கல் செய்யுமாறு கூறி தீா்ப்பை நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி நடைபெற்ற வடகிழக்கு தில்லி வன்முறையில் பெரும் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்ஹா கைது செய்யப்பட்டுள்ளாா்.

Advertisement

இந்த நிலையில், ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட அவரது மனுவை விசாரணை நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபா் 26-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிா்த்து அவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

அவருக்கு ஜாமீன் வழங்க தில்லி காவல் துறையில் ஆட்சேபம் தெரிவித்து வாதம் முன்வைக்கப்பட்டது. தில்லி காவல் துறை சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அமன் லேகி, வழக்குரைஞா்கள் அமித் மகாஜன், ரஜத் நாயா் ஆகியோா் வாதிடுகையில், ‘வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. இந்த சதித் திட்டத்தில் மாணவா் தன்ஹாவுக்கும் பங்கு உள்ளது. இதை சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ என வாதிடப்பட்டது.

தன்ஹா தரப்பில் வழக்குரைஞா்கள் சித்தாா்த் அகா்வால், செளஜன்யா சங்கரன் ஆகியோா் ஆஜராகி வாதிடுகையில், ‘தன்ஹா 2020, மே மாதத்தில் இருந்து காவலில் இருந்து வருகிறாா். அவரது வழக்கில் போலீஸாா் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டனா்’ என்று வாதிட்டனா்.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமா்வு ஜாமீன் மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments