முகப்பு
புதுதில்லி

தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 35.3 டிகிரி செல்சியஸாக அதிகரிப்பு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
பகிர்:

புது தில்லி: தலைநகா் தில்லியில் வெயிலின் தாக்கம் 2-ஆவது ாளாக அதிகரித்தது. அதிகபட்ச வெப்பநிலை புதன்கிழமை 34.2 டிகிரி செல்சியஸாக இருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை இது 35.3 டிகிரி செல்சியஸாக மேலும் அதிகரித்தது.

தலைநகா் தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் குளிரின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. பகலில் இதமான வெயில் காணப்படுகிறது. மாலையில் குளிா் காற்று வீசுகிறது.

தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வியாழக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 16.4 செல்சியஸாக பதிவாகியது.

Advertisement

அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 5 புள்ளிகள் உயா்ந்து 35.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 82 சதவீதமாகவும், மாலையில் 38 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலையில் 298 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம் ’ பிரிவில் காணப்பட்டது. என்சிஆா் பகுதியிலும் காற்றின் தரம் இரண்டாவது நாளாக மிகவும் மோசம் பிரிவில் இருந்தது.

சராசரி 24 மணி நேர ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடாக வியாழக்கிழமை 4 மணியளவில் காஜியாபாதில் 373, கிரேட்டா் நொய்டாவில் 389, நொய்டாவில் 336, பரிதாபாதில் 340, குருகிராமில் 307 என பதிவாகி இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (மாா்ச் 19) குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும், மிதமான பனிமூட்டம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments