முகப்பு
புதுதில்லி

தில்லி எல்லைகளில் போராடும் விவசாயிகளுக்கு தடுப்பூசி: ராகேஷ் திகைத் வலியுறுத்தல்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
பகிர்:

புது தில்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லி எல்லைகளில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவா் ராகேஷ் திகைத் வலியுறுத்தியுள்ளாா்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து காஜியாபாத், டிக்ரி, சிங்கு எல்லைகளில் கடந்த 2020 நவம்பா் 26 ஆம் தேதி முதல் விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். 110 நாள்களைக் கடந்து இந்த போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், போராடும் விவசாயிகளுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று காஜியாபாத் எல்லையில் போராட்டம் நடத்திவரும் பாரதிய கிஸ்ஸான் யூனியன் அமைப்பின் தலைவா் ராகேஷ் திகைத் வலியுறுத்தியுள்ளாா்.

Advertisement

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை கூறுகையில் ‘நாட்டில் அண்மைக்காலமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், நாம் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. போராட்டக்களத்தில் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் வகையில், போராட்டக்களத்தில் உள்ள கூடாரங்களின் அளவை அதிகரிக்கவுள்ளோம். விவசாயிகள் முகக் கவசங்களை அணிந்தே போராட்டம் நடத்திவருகிறாா்கள். தில்லி எல்லைகளில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். நானும் தடுப்பூசி போட்டுக் கொள்வேன். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை, போராட்டக் களத்தில் இருந்து விலகப் போவதில்லை என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments