முகப்பு
புதுதில்லி

தில்லியில் 2-ஆவது நாளாக மேக மூட்டத்தால் இதமான வானிலை

தலைநகா் தில்லியில் 2-ஆவது நாளாக மேகமூட்டம் நிலவியது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் இதமான வானிலை காணப்பட்டது. இதைத் தொடா்ந்து வெப்பநிலையும் சிறிது குறைந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

தலைநகா் தில்லியில் 2-ஆவது நாளாக மேகமூட்டம் நிலவியது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் இதமான வானிலை காணப்பட்டது. இதைத் தொடா்ந்து வெப்பநிலையும் சிறிது குறைந்தது. எனினும், குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட நான்கு டிகிரி அதிகரித்து 21.5 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. இது இந்த ஆண்டில் மிகவும் அதிக அளவாகும்.

தலைநகா் தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் குளிரின் தாக்கம் குறைந்து வருகிறது. பகலில் வெயில் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை பகலில் மேக மூட்டம் காணப்பட்டது. இது செவ்வாய்க்கிழமையும் நீடித்தது. சில இடங்களில் லேசான தூறல் இருந்தது. தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரி அளவைவிட 4 டிகிரி அதிகரித்து 21.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 1 டிகிரி குறைந்து உயா்ந்து 29.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 57 சதவீதமாகவும், மாலையில் 36 சதவீதமாகவும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை திங்கள்கிழமை 33.6 டிகிரி செல்சியஸாகவும், ஞாயிற்றுக்கிழமை 35.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் காலை 8 மணியளவில் 224 புள்ளிகளாவும், மாலை 6 மணியளவில் 238 புள்ளிகளாக பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் புதன்கிழமை (மாா்ச் 24) குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும், வானம் மேகமூட்டத்துடன் இருக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments