FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ. 2 லட்சம் தள்ளுபடி! ஏப்ரல் மாத சலுகைகள் என்னென்ன?

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 7 ஏப்ரல் 2026, 4:28 pm IST
மாருதி சுசூகி - படம் / நன்றி - மாருதி சுசூகி
பகிர்:

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாத கோடை தொடக்கத்தையொட்டி நெக்ஸா காருக்கு பரிமாற்ற போனஸ்கள், மேம்படுத்தல் சலுகைகள், நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மற்றும் வரிச் சலுகைகள் போன்ற கூடுதல் பயன்களை மாருதி சுசூகி வழங்கி வருகிறது.

இதேபோன்று மாருதி சுசூகி இன்விக்டோ (Invicto) காருக்கும் ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. நுகர்வோர் சலுகையாக ரூ. 50,000. பழைய காரை மாற்றம் செய்துகொள்வதன் மூலம் ரூ. 1,00,000 போனஸ். சில பழைய மாடல் கார்களுக்கு ரூ. 50,000 வரை சிறப்புத் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

மேலும், மாருதி சுசூகியில் உள்ல கிராண்ட் விடாரா (Grand Vitara) காருக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹைப்ரிட் வெர்ஷன் காருக்கு சாலை வரி முழுக்க முழுக்க ரத்து செய்யப்படுள்ளது. 5 ஆண்டுகால உத்திரவாதத்துடன் இதன் மதிப்பு ரூ. 1,85,000. பழைய காரை மாற்றிக்கொண்டால் ரூ. 50,000 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசூகியின் ஜிம்னி காரை வாங்கினால் ரூ. 50,000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் இக்னிஸ் காருக்கு ரூ. 20,000 வரையும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள மாருதி சுசூகி நெக்சா கிளைகளில் இது தொடர்பான விரிவான விவரங்களை அறிந்துகொள்ளலாம் என மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments