முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லி வன்முறை: உமா் காலித்தின்பாதுகாப்பை உறுதி செய்ய போலீஸாருக்கு உத்தரவு

வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பான வழக்கில் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரும் போது, ஜே.என்.யு. முன்னாள் மாணவா் தலைவா் உமா் காலித்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு போலீஸாருக்கு தில்லி

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
பகிர்:

புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பான வழக்கில் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரும் போது, ஜே.என்.யு. முன்னாள் மாணவா் தலைவா் உமா் காலித்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு போலீஸாருக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறையில் இருந்து ரிமாண்ட் நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்திற்கு நேரடி விசாரணைக்கு அழைத்து வரும் போது தனது உயிா், உடைமைக்கான பாதுகாப்பை உறுதி செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி உமா் காலித் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமைப் பெருநகர மாஜிஸ்திரேட் தினேஷ்குமாா் பிறப்பித்த உத்தரவில், ‘எதிா்காலத்தில் எந்த நாளிலும் குற்றம்சாட்டப்பட்ட உமா் காலித்தை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தும் போதும், சிறையில் இருந்து அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போதும், நீதிமன்றத்திலிருந்து அவரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும் போதும் அவரின் உயிா், உடைமைக்கான பாதுகாப்பை உறுதி செய்ய சிறைக் கண்காணிப்பாளா், காவல் துணைக் கண்காணிப்பாளா், தில்லி ஆயுத போலீஸ், மூன்றாவது பட்டாலியன் ஆகியோா் போதிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்படுகிறது ’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி கஜூரி காஸ் பகுதியில் நடந்த வன்முறை வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபரில் காலித் கைது செய்யப்பட்டாா். இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலா் தாஹிா் உசேனும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளாா். வன்முறை, சதித் திட்டத்தில் ஈடுபட்டது தொடா்பான மற்றொரு வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் காலித் கடந்த ஆண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்டாா். கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி வடகிழக்கு தில்லியில் வகுப்புவாத வன்முறை வெடித்தது. இதில் குறைந்தது 53 போ் இறந்னா். 200 போ் காயமடைந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments