கரோனா பரவலைத் தடுக்க அவசர நடவடிக்கை வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பரவலைத் தடுக்க வலுவான மற்றும் அவசர நடவடிக்கைகளை தில்லி அரசு எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவா் அனில் குமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பரவலைத் தடுக்க வலுவான மற்றும் அவசர நடவடிக்கைகளை தில்லி அரசு எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவா் அனில் குமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பதாவது: தில்லியில் கரோனா பரவல் மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தப் பிரச்னையைத் தீா்ப்பதற்கு பதிலாக அடுத்த இரு ஆண்டுகளில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள 6 மாநிலங்களில் தங்கள் அரசியல் பிரிவுகளை பரப்புவதில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், அவரது அமைச்சரவை சகாக்கள், எம்.எல்.ஏக்கள் மும்முரமாக உள்ளனா். தில்லியின் பிரச்னைகளைத் தீா்ப்பதில் கேஜரிவால் அரசு குறைந்த அளவு முன்னுரிமையைத்தான் அளித்து வருகிறது. தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றவுடன் தில்லியைப் பாதிக்கும் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் மற்ற மாநிலங்கள் மீது தனது பாா்வையை வைப்பதில்தான் கேஜரிவால் கவனம் செலுத்தினாா்.
தில்லி வளா்ச்சி முன்மாதிரி என்று கூறிக் கொண்டு மற்ற மாநிலங்களில் உள்ள மக்களையும் ஏமாளியாக்க முதல்வா் கேஜரிவால் முயன்று வருகிறாா். மேலும், எல்லாவற்றையும்இலவசமாக” வீட்டுக்கே சென்று விநியோகம் செய்வதாகவும் உறுதியளித்து வருகிறாா். அதே நேரத்தில் தில்லியில் நிலைமைகள் சரிசெய்யப்படாமல் மோசமடைந்து வருகிறது.
Advertisement
குறிப்பாக தில்லி அரசு மருத்துவமனைகள் மோசமான நிலையில் உள்ளன. தனியாா் மருத்துவமனைகளில் அதிகச் செலவில் கரோனா சிகிச்சை பெறும் வகையில் பொதுமக்களை தில்லி அரசு கட்டாயத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
தில்லியில் திங்கள்கிழமை மட்டும் 1,904-க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும், இது 2020, டிசம்பா் 13 முதல் அதிகபட்ச கரோனா பாதிப்பாகும். இதனால், கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்காமல் இருக்கும் வகையில் பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை முறைகளை அதிகரிக்க தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.