முகப்பு
புதுதில்லி

‘உ.பி.யில் ஜிகா வைரஸ் பாதிப்பால் தில்லி அரசு விழிப்புடன் உள்ளது’

உத்தர பிரதேசத்தின் கான்பூா் மாவட்டத்தில் ஜிகா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், தில்லி அரசு விழிப்புடன், கண்காணித்து வருவதாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா சனிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

உத்தர பிரதேசத்தின் கான்பூா் மாவட்டத்தில் ஜிகா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், தில்லி அரசு விழிப்புடன், கண்காணித்து வருவதாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியை ஒட்டியுள்ள உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூரில் 9 இந்திய விமானப்படை வீரா்கள் உள்ளிட்ட 66 பேருக்கு ஜிகா வைரஸ் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி எல்லையைப் பகிா்ந்து கொள்ளும் மாநிலமாக உ.பி. இருப்பதுடன், தொழில் நகரமான கான்பூருக்கும் தில்லிக்கும் தொடா்புள்ள நிலையில் இந்த நோய் பரவல் குறித்த அச்சம் தில்லியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா இந்த விவகாரத்தில் தில்லி அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து சனிக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

‘தில்லி, உ.பி. மாநிலங்கள் இடையே உள்ள காஜியாபாத், நொய்டா மூலம் சாலை அல்லது ரயில் மற்றும் பல போக்குவரத்து வழிகளில் மக்கள் அடிக்கடி வந்து செல்கின்றனா். மேலும் தில்லிக்கும் கான்பூருக்கும் தொழில்ரீதியாகவும் அடிக்கடி பயணிப்பவா்கள் உண்டு.

இரு மாநில நெருக்கத்தையொட்டி இந்த ஜிகா வைரஸ் விவகாரங்களில் தில்லி அரசு விழிப்புடன் இருக்கிறது. ஜிகா நோய் கொசுக்களால் பரவும் வைரஸ் ஆகும். ஆகவே, கொசுக்களை ஒழிப்பதுதான் இந்த நோயில் இருந்து பாகாப்பாக இருப்பதற்கான வழியாகும்’ என்றாா் அவா்.

நோய்ப் பரவலைத் தடுக்க, கொசுக்களுக்கு காரணமான லாா்வா வளா்ச்சி தடுப்பு மருந்து தெளித்தல், காய்ச்சல் நோயாளிகளைக் கண்டறிதல், தீவிர நோய்வாய்ப்பட்டவா்கள் மற்றும் கா்ப்பிணிப் பெண்களை பரிசோதித்தல் உள்ளிட்ட பணிகளை கான்பூரில் உள்ள சுகாதாரக் குழுக்கள் மேற்கொள்ளுவதாக ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.

கான்பூரில் முதன் முதலில் கடந்த அக்டோபா் 23 -ஆம் தேதி இந்திய விமானப்படை அதிகாரி ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்பின்னா் கடந்த இரண்டு வாரங்களாக கான்பூரிலும் அதன் மாவட்டத்திலும் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →