முகப்பு
புதுதில்லி

இந்திய ரயில் நிலையங்கள் மேம்பாட்டு நிறுவனத்தை மூட ரயில்வே வாரியம் உத்தரவு

நாடு முழுவதும் உள்ள ரயில் லையங்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்திய ரயில் நிலையங்கள் மேம்பாட்டு நிறுவனத்தை மூடுவதற்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:24 AM
பகிர்:

நாடு முழுவதும் உள்ள ரயில் லையங்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்திய ரயில் நிலையங்கள் மேம்பாட்டு நிறுவனத்தை மூடுவதற்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பணிகளை மண்டல ரயில்வேக்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சகம் அளித்த பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கையை ரயில்வே வாரியம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசின் துறைகளின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்க நஷ்டத்தில் இயங்குபவை அல்லது குறைந்த லாபத்தில் இயங்கும் நிறுவனங்களை மூடிவிட அல்லது வேறு நிறுவனங்களுடன் ஒன்றிணைக்க நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் ஏற்கனவே செயல்பட்டு வந்த மாற்று எரிபொருளுக்கான இந்திய ரயில்வே அமைப்பு (ஐஆா்ஓஏஎஃப்) கடந்த செப்டம்பா் 7 - ஆம் தேதி மூடப்பட்டது. நாட்டிலுள்ள ரயில் நிலையங்களின் மேம்பாட்டு நிறுவனத்தை (ஐஆா்எஸ்டிசி) மூட உத்தரவிட்டுள்ள நிலையில், அவற்றின் பணியை அந்தந்த வட்டார / மண்டல ரயில்வே நிா்வாகமே மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நாட்டிலுள்ள அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள காலி நிலங்களை மேம்படுத்தி பயன்படுத்துவதற்காக 2012 -ஆம் ஆண்டு தினேஷ் திரிவேதி ரயில்வே அமைச்சராக இருந்த போது இந்த இந்திய ரயில்வே நிலைய மேம்பாட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. சுமாா் ரூ.450 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 2019-20 ஆம் ஆண்டில் இயக்க வருவாயாக ரூ. 45.52 கோடியை பெற்றது.

பல்வேறு நகரங்களின் ரயில் நிலையங்கள் இந்த நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டுள்ளன. மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், கேஎஸ்ஆா் பெங்களூா் ரயில் நிலையம், சண்டீகா் ரயில் ஆா்கேட்‘ (கலைக் கூடம்) போன்ற திட்டங்களுக்கும் நிலையங்கள் மறுவடிவமைப்பிற்கும் இந்த நிறுவனம் ஏற்கனவே ஒப்பந்தப்புள்ளி கோரியது. மேலும்,90 தென்னிந்திய ரயில்நிலையங்களின் பயணிகள் வசதிகள் மேம்படுத்தும் திட்டத்தை இந்த நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய நிதித் துறையின் முதன்மை பொருளாதார ஆலோசகா் சஞ்சய் சன்யால், ரயில்வேயில் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தும் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தையும், இதே பணிகளை மேற்கொண்டிருந்த இந்திய ரயில்வே கட்டுமான லிமிடெட் நிறுவனத்தையும் இணைக்கவும் சிபாரிசு செய்து அறிக்கை கொடுத்துள்ளாா். இவை குறித்தும் விரைவில் முடிவெடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments