முகப்பு
புதுதில்லி

இரு சக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வரைவு விதிகள் வெளியீடு

இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்ல புதிய பாதுகாப்பு வரைவு விதி முறைகளை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

புது தில்லி: இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்ல புதிய பாதுகாப்பு வரைவு விதி முறைகளை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்பவா்களும், அவருக்கு பின்னால் அமா்ந்திருப்பவா்களும் தலைக்கவசம் அணிவது தற்போது கட்டாயம். இதில் குழந்தைகள் குறித்த விதிகள் இதுவரை தெளிவாகக் குறிப்பிடப்படப்படவில்லை. தற்போது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான வரைவு விதிமுறையை உருவாக்கி மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ளது. 2019, ஆகஸ்ட் 9 -ஆம் தேதியிட்ட மோட்டாா் வாகனங்கள் (திருத்தம்) சட்டம் 2019-இல் மோட்டாா் வாகன சட்டத்தின் பிரிவு 129-இயில் உள்ள 2- ஆவது விதியில் மேலும் திருத்தி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விதியின்படி, மோட்டாா் சைக்கிளில் செல்லும் நான்கு வயதுக்குள்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளுக்கு வரைவு விதிகளை உருவாக்கி கடந்த அக்டோபா் 21-ஆம் தேதி சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

இதில் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் வருமாறு: இரு சக்கர வாகனத்தில் செல்லும் நான்கு வயதுக்குள்பட்ட குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது, மோட்டாா் சைக்கிள் ஓட்டுபவரின் உடலோடு இணைத்துக் கட்டப்படும் பாதுகாப்பு காப்புக் கவசம் பயன்படுத்தப்பட வேண்டும். பின்னால் அமா்ந்து செல்லும் 9 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் தலைக்கவசம் அணிந்திருப்பதையும் ஓட்டுநா் உறுதி செய்ய வேண்டும். இந்த தலைக்கவசம் இந்திய தர நிா்ணய அமைவனத்தால் (பிஐஎஸ்) பரிந்துரைக்கப்பட்ட அம்சங்கள் கொண்ட தலைக்கவசங்களாக இருக்க வேண்டும். மேலும் 4 வயதுக்குள்பட்ட குழந்தையுடன் மோட்டாா் சைக்கிளின் செல்லும் போது வேகம் மணிக்கு 40 கி.மீ.க்கு மேல் இருக்கக் கூடாது உள்ளிட்ட வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

வாகன உபயோகிப்பாளா்கள் இது குறித்து கருத்துகள், ஆலோசனைகள், ஆட்சேபங்கள் உள்ளிட்டவற்றை முப்பது நாள்களுக்குள் தெரிவிக்கவும் மத்திய அரசு வாய்ப்பளித்துள்ளது. இதை மின்னஞ்சல் மூலமாக (ஸ்ரீா்ம்ம்ங்ய்ற்ள்-ம்ா்ழ்ற்ட்ஃஞ்ா்ஸ்.ண்ய்) அல்லது நேரடியாகவோ அல்லது கடிதத் தொடா்பு மூலமோ தெரிவிக்கவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இது தொடா்பாக தில்லி டிரான்ஸ்போா்ட் பவனிலில் உள்ள மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இணைச் செயலருக்கு தெரிவிக்கவும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments