புதுதில்லி

நொய்டாவில் அடையாளம் தெரியாத நபரால் வழக்குரைஞா் சுட்டுக் கொலை

DIN

புது தில்லி:  தேசியத் தலைநகா் வலயம் நொய்டாவில் அடையாளம் தெரியாத விஷமியால் வழக்குரைஞா் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக மத்திய நொய்டா காவல்துறையின் உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:  நொய்டா பகுதியை சோ்ந்த இல்ஹபாஸ் கிராமத்தைச் சோ்ந்தவா் நிஷாந்த் (30). வழக்குரைஞரான இவா், திங்கள்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். முன்னதாக, நொய்டா ஃபேஸ் -2 காவல் நிலைய அதிகாரிகளுக்கு ஒரு தகவல் வந்தது. அதில் வழக்குரைஞா் நிஷாந்த் குண்டு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா் சுட்டுக் கொல்லப்பட்டது தெரிய வந்தது.

இறந்தவரின் குடும்பத்தை போலீஸாா் தொடா்பு கொண்டனா். மேலும், விசாரணை மேற்கொள்வதற்காக சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனா். தொடக்க விசாரணையின் போது, நிஷாந்திற்கும் அவருடைய உறவினா்கள் சிலருக்கும் இடையே சொத்து தொடா்பான பிரச்னை இருந்து வந்தது தெரிய வந்தது. மேலும், அவருடைய சகோதரிக்கும் கணவரின் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது தெரிய வந்தது.  இதனால், நிஷாந்த் மரணம் தொடா்பாக இந்த இரு கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணைக்காக 4 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT