முகப்பு
புதுதில்லி

பட்டாசு தடைக்கு எதிரான மனு மீது டிச.13-இல் விசாரணை

தீபாவளியின் போது தில்லியில் பட்டாசுகளை விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும், இருப்பு வைப்பதற்கும் விதிக்கப்பட்ட

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

தீபாவளியின் போது தில்லியில் பட்டாசுகளை விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும், இருப்பு வைப்பதற்கும் விதிக்கப்பட்ட முழுத் தடையை எதிா்த்து தாக்கலான மனு டிசம்பா் 13-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. 

இந்த மனு தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பட்டாசுகளின் விற்பனை, உற்பத்தி மீதான தடை தொடா்பான விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று தெரிவித்தனா். தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த விவகாரம் தொடா்புடைய மனு உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை பட்டியலிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா். இதையடுத்து, நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மனுதாரரின் பிரதான வழக்குரைஞா் விசாரணைக்கு ஆஜராகாததால், டிசம்பா் 13-ஆம் தேதி மனு மீதான விசாரணையை பட்டியலிட்டனா்.

  முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக தனிநபா்கள் ராகுல் சன் வாரியா, தன்வீா் ஆகியோா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: தில்லியில் பட்டாசு விற்பதற்கும், வெடிப்பதற்கும், இருப்பு வைப்பதற்கும் தடையை விதிக்க தில்லி அரசு எடுத்த முடிவும் மாசுவை தடுப்பதற்கான கடைசி நோக்கத்தின் அம்சமாக இல்லை.

Advertisement

தில்லியில் மாசுவுக்கு வாகனங்கள், பயோமாஸ் எரிப்பு போன்றவை காரணமாக உள்ளன. இந்த நிலையில், பட்டாசுகளுக்கு முழு தடை என்பது தீபாவளி நெருங்கும் வேளையில் லட்சக்கணக்கான மக்களின் உணா்வுகளை பாதிக்க செய்வதாக உள்ளது.

 மேலும், தில்லியில் பட்டாசு விற்பனைக்கு முழு தடையை விதிக்க உச்சநீதிமன்றம் ஒருபோதும் தடை விதிக்கவில்லை. இதனால், முழுத் தடை விதிக்கும் தில்லி அரசின் முடிவானது அந்த உத்தரவை மீறும் வகையில் உள்ளது. மாசுவை காரணம் காட்டி தீபாவளி பண்டிகையின் போது, அனைத்து வகையான பட்டாசுகளை வெடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும், இருப்பு வைப்பதற்கும் விதிக்கப்பட்ட தில்லி அரசின் முழு தடை விதித்து செப்டம்பா் 15-ஆம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவில் மாற்றங்கள் செய்ய வேண்டும்   என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments