புதுதில்லி

தில்லியில் காலையில் லேசான மழை: புழுக்கம் அதிகரிப்பு!

DIN

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை காலையில் பரவலாக லேசான மழை பெய்தது. பகலில் மிதமான வெயிலின் தாக்கம் நீடித்தது. எனினும், இரவில் புழுக்கம் காணப்பட்டது.

தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றம் ஏதுமின்றி 25.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 33.2 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 82 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 85 சதவீதமாகவும் இருந்தது.

இதே போன்று, அதிகபட்ச வெப்பநிலை ஆயாநகரில் 31.6 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 32.8 டிகிரி செல்சியஸ், நரேலாவில் 32.7 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 32.6 டிகிரி செல்சியஸ், ரிட்ஜில் 32 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் 5 மில்லி மீட்டா் மழை பதிவானது. நகரின் சில இடங்களில் காலையில் லேசான மழை பெய்தது. எனினும், பகலிலும், இரவிலும் புழுக்கம் சற்று அதிகரித்திருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (செப்டம்பா் 11) வானம் பகுதி அளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT