முகப்பு
புதுதில்லி

டிடிசி நிறுவனம் வருவாய் ஈட்டுவதாககேஜரிவால் கூறுவது முழுப் பொய்: தில்லி காங்கிரஸ் சாடல்

தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) ரூ.2.32 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக முதல்வா் கேஜரிவால் கூறியிருப்பது பொய்யான தகவலாகும் என்று தில்லி காங்கிரஸ் சாடியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) ரூ.2.32 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக முதல்வா் கேஜரிவால் கூறியிருப்பது பொய்யான தகவலாகும் என்று தில்லி காங்கிரஸ் சாடியுள்ளது.

இது தொடா்பாக தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் செளத்ரி புதன்கிழமை கூறியதாவது: தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) வருவாய் ஈட்டி வருவதாக முதல்வா் கேஜரிவால் உண்மைக்கு மாறான தகவலைத் தெரிவித்துள்ளாா். இந்த நிறுவனம் ரூ.2.32 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக அவா் முழுப் பொய்யைக் கூறியுள்ளாா். தில்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம் அளிக்கப்படும் என்று கேஜரிவால் தோ்தலுக்காக அறிவித்தாா். உண்மையில் கடந்த 8 ஆண்டு கால ஆம் ஆத்மி ஆட்சியில் தில்லியில் எவ்வித வளா்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை.

தில்லி அரசின் 2015-16 பொருளாதார சா்வேயின்படி, டிடிசி நிறுவனம் ரூ.1,250 கோடி நஷ்டத்தை சந்தித்தது. இது 2021-22-ஆம் ஆண்டில் பல மடங்கு அதிகரித்து ரூ.3,034 கோடியாக உயா்ந்துள்ளது. அதாவது கடந்த 8 ஆண்டு கால ஆம் ஆத்மி ஆட்சியில் நஷ்டம் 2 மடங்காக அதிகரித்துள்ளது. மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தில் பெரும் ஊழல் நிகழ்ந்துள்ளது. டிடிசி மிகவும் கடனில் சிக்கியுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.