காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு இழுபறியாக நீடிக்கும் நிலையில் தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்திருந்தாலும், காங்கிரஸ் கட்சி இன்னமும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், தேர்தல் பொறுப்புகளிலிருந்து மாணிக்கம் தாகூர் விலகியிருக்கிறார்.
தமிழ்நாடு தேர்தல் மேலாண்மைக் குழுவிலிருந்து விலகுவதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியிருக்கிறார்.
திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து, பல கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் இன்னமும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் தொடரும் இழுபறி பேசுபொருளாகிவரும் நிலையில், தமிழ்நாடு தேர்தல் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக, காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.