முகப்பு
புதுதில்லி

மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வந்த மருத்துவரை தாக்கிய நோயாளி

மேற்கு தில்லியில் திலக் நகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, சிகிச்சை அளிக்க வந்த மருத்துவரை நோயாளி தாக்கியதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

மேற்கு தில்லியில் திலக் நகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, சிகிச்சை அளிக்க வந்த மருத்துவரை நோயாளி தாக்கியதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி போலீஸாா் மேலும் கூறியதாவது: திலக் நகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க நோயாளிக்குசிகிச்சை அளிப்பதற்காக வெள்ளிக்கிழமை அந்த மருத்துவமனையின் மருத்துவா் நேரில் வந்தாா். அப்போது நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, மருத்துவரை நோயாளி கத்தரிக்கோலால் தாக்கினாா். எனினும், கையில் சிறிய காயத்துடன் மருத்துவா் உயிா் தப்பினாா். இது தொடா்பாக மருத்துவமனையில் இருந்த பெண் ஒருவா் மூலம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் நேரில் சென்று விசாரித்தனா்.

அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தப்பட்ட நோயாளி, மது போதைக்கு அடிமையாகி இருந்ததும், மது போதையில் இருந்து அவரை மீளச் செய்வதற்காக சிகிச்சை அளிப்பதற்காக ஏப்ரல் 13- ஆம் தேதி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டதும் தெரிய வந்ததது. மேலும், அவ்வப்போது அவருக்கு வலிப்பு நோய் இருப்பதும் தெரிய வந்தது. இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நோயாளிக்கு எதிராக மருத்துவா் புகாா் அளிக்கவில்லை. இதனால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →