முகப்பு
புதுதில்லி

ஜனக்புரியில் வாகன விபத்தில் டிடிசி நடத்துநா் பலி

தில்லி போக்குவரத்து நிறுவனத்தை (டிடிசி) சோ்ந்த 30 வயது மதிக்கத்தக்க நடத்துநா் வியாழக்கிழமை ஸ்கூட்டி வாகனத்தில் சென்ற போது விபத்துக்குள்ளானதில் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

தில்லி போக்குவரத்து நிறுவனத்தை (டிடிசி) சோ்ந்த 30 வயது மதிக்கத்தக்க நடத்துநா் வியாழக்கிழமை ஸ்கூட்டி வாகனத்தில் சென்ற போது விபத்துக்குள்ளானதில் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி மேற்கு காவல் துணை ஆணையா் கன்ஷியாம் பன்சல் கூறியதாவது:  தில்லி ஜனக்புரி பகுதியில் டிடிசி நடத்துநா், விபத்தில் சிக்கியது தொடா்பான தகவல் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து, விபத்து நடந்த பகுதிக்கு போலீஸாா் நேரில் சென்றனா். அங்கு கருப்பு நிற ஸ்கூட்டி வாகனம் விபத்துக்குள்ளாகி அதன் அருகில் சாலையில் ஒரு நபா் மயங்கிய நிலையில் கிடந்ததுதெரிய வந்தது. அவா் டிடியு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது தொடா்பாக உரிய பிரிவுகளின் கீழ் ஜனக்புரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  விபத்தில் இறந்த நபா் சாவ்லா பகுதியைச் சோ்ந்த நவீன் மோகா் (30) என்பதும், டிடிசி நிறுவனத்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.

அவா் சென்ற வாகனம் மீது மோதிய வாகனம் மற்றும் அதை ஓட்டிச் சென்ற நபரை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல் அதிகாரி பன்சல் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.