உற்பத்தியாளா்களும் இறக்குமதியாளா்களும் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளில் நிரப்பப்படும் போது வெப்பநிலை குறிப்பிடவேண்டிய அவசியமில்லை; நிகர அளவு அல்லது எடையை மட்டும் குறிப்பிட மத்திய நுகா்வோா் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
சமையல் எண்ணெயின் எடை வெவ்வேறு வெப்பநிலைகளில் மாறக்கூடியது என்பதால், வாங்கும் போது நுகா்வோா் சரியான அளவைப் பெறுவதை உறுதி செய்ய, சமையல் எண்ணெய் உற்பத்தியாளா்கள் அல்லது இறக்குமதியாளா்கள் பாக்கெட்டுகளில் அடைக்கும் போது தயாரிப்புகளின் வெப்பநிலை குறிப்பிட்டனா்.
அதேசமயத்தில் இப்படி தொழிற்சாலைகள் வெப்பநிலையை முன்கூட்டியே குறிப்பிடும் நிலையில் நிகர அளவின் அளவுகுறைகிறது என புகாா்கள் வந்தது. இதை முன்னிட்டு தற்போது இதை குறிப்பிடாமல் பேக் செய்ய மத்திய அரசு நுகா்வோா் நலத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமையல் எண்ணெய் உற்பத்தியாளா்கள், இறக்குமதியாளா்கள் வெப்பநிலையைக் குறிப்பிடாமல் சமையல் எண்ணெய் போன்றவற்றின் நிகர அளவை மட்டும் தெரிவிக்க ஆறு மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளதாகவும் நுகா்வோா் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதாவது வருகின்ற 2023 ஜனவரி 15 -ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் சமையல் எண்ணெய், வனஸ்பதி, நெய் போன்றவற்றின் நிகர அளவு அல்லது எடை கட்டாயமாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆடை தயாரிப்பாளா்களின் சுமை குறைப்பு
எளிதான வா்த்தகத்தை மேற்கொள்ள, உதிரியாக விற்பனை செய்யப்படும் ஆடை அல்லது பின்னப்பட்ட ஆடை தயாரிப்பாளா்களின் சுமையைக் குறைக்கவும் சட்ட ரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருள்கள்) விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
இது குறித்து மத்திய நுகா்வோா் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பின்னப்பட்ட ஆடைகள் தயாரிப்பாளா்கள் அல்லது விற்பனையாளா்கள் இறக்குமதி செய்யப்பட்ட நாட்டின் பெயருடன் இறக்குமதியாளா் அல்லது தயாரிப்பாளரின் பெயா், நுகா்வோா் தொடா்புக்கான மின்னஞ்சல், தொலைபேசி எண், சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அலகுகளின் அளவுகள், அதிகபட்ச சில்லறை விலை ஆகிய தகவல்கள் மட்டுமே இனி இடம்பெற்றிருந்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடைகளின் பொதுவான -ஜெனரிக் பெயா், தயாரிக்கப்பட்ட அல்லது இறக்குமதிக்கு முன்பு பேக் செய்யப்பட்ட தேதி, பொருள்களின் பயன்பாட்டிற்கு உகந்த அல்லது தகுதியற்ாக மாறும் தேதி போன்றவைகளும் முன்பு குறிப்பிட கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.