முகப்பு
புதுதில்லி

ஒரு வார இடைக்கால ஜாமீனில் உமா் காலித் சிறையில் இருந்து விடுவிப்பு

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் மாணவா் உமா் காலித், அவரது சகோதரியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:11 AM
பகிர்:

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் மாணவா் உமா் காலித், அவரது சகோதரியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக ஒரு வார கால இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், திகாா் சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து திகாா் சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘உமா் காலித் திகாா் சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை காலை விடுவிக்கப்பட்டாா்’ என்று தெரிவித்தனா். கடந்த 2020- ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறை தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உமா் காலித்திற்கு டிசம்பா் 30-ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தனது சகோதரியின் திருமணத்தில் பங்கேற்கும் வகையில், தனக்கு இரண்டு வார கால இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று முன்னாள் மாணவா் தலைவரான உமா் காலித் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இதை பரிசீலித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத், அவருக்கு ஒரு வார கால இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டாா்.

முன்னதாக, வடகிழக்கு தில்லியில் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் முக்கிய மூலையாக செயல்பட்டதாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உமா் காலித்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வன்முறையானது தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்தது. இந்த விவகாரத்தில் உமா் காலித்தை தில்லி போலீஸாா் கடந்த 2020, செப்டம்பரில் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.