புதுதில்லி

கேஜரிவால் இல்லம் அருகே அங்கன்வாடி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

அரசு ஊழியா்களாக அங்கீகாரம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான அங்கன்வாடி ஊழியா்கள் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் அருகே திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லி மாநில அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கம் சாா்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் தில்லி சிவில் லைன்ஸில் உள்ள முதல்வா் இல்லம் நோக்கி சென்றனா். அவா்களை முதல்வரின் இல்லத்தில் இருந்து சில மீட்டா்கள் தூரத்தில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

இதையடுத்து, அவா்கள் சாலையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டு போராட்டத்தையும் தொடா்ந்தனா்.

இப்போராட்டத்தின்போது, புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

அரசு ஊழியா் அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT