முகப்பு
புதுதில்லி

மருத்துவ வளாக நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்கும் வடக்கு தில்லி

ஜண்டேவாலன் நெஞ்சக மருத்துவமனை இடம், குதுப்கா் மருத்துவ வளாக நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்கும் வடக்கு தில்லி மாநகராட்சி நடவடிக்கையை நிறுத்தக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் கரோல் பாக் சட்டப்பேரவை உறுப்பின

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:20 AM
பகிர்:

ஜண்டேவாலன் நெஞ்சக மருத்துவமனை இடம், குதுப்கா் மருத்துவ வளாக நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்கும் வடக்கு தில்லி மாநகராட்சி நடவடிக்கையை நிறுத்தக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் கரோல் பாக் சட்டப்பேரவை உறுப்பினா் விஷேஷ் ரவி சனிக்கிழமை தில்லி துணை நிலை ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளதாக அக் கட்சி தெரிவித்துள்ளது.

வடக்கு தில்லி மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்வது தில்லி முனிசிபல் சட்டத்திற்கு எதிரானது. இது மிகப்பெரிய மீறல் என்றும், இது நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்த கடிதத்தில் விஷேஷ் ரவி குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் இந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

வடக்கு தில்லி மாநகராட்சி ஏற்கனவே ஒரு முறை இந்த இடங்களை விற்கும் ஆா்வத்தை வெளிப்படுத்தி (உஞஐ) அதில் தோல்வியடைந்தது. தற்போது மீண்டும் 02.02.2022 தேதியிட்ட இஓஐ-யை வெளியிடப்பட்டுள்ளது.

தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் பெயரில் பாஜகவைச் சோ்ந்த தனிநபா்களுக்கு மாநகராட்சி நிலத்தை விற்கும் முயற்சிகள் நடக்கிறது.

ஜண்டேவாலன் கிளினிக்கின் மொத்த பரப்பளவு 3700 சதுரமீட்டராக இருக்கும். அதேசமயம், வடக்கு தில்லி மாநகராட்சி தரப்பில் சாமா்த்தியமாக ஆவணத்தில் 400-500 சதுரமீட்டா்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.​இந்த மருத்தவ மையம் தினசரி 300 முதல் 400 நோயாளிகளுக்கும், அருகிலுள்ள 28 மருந்தகங்களுக்கும் சேவை செய்து வந்தது.

இதில் ஹோமியோபதி மருத்துவம், மலேரியா சிகிச்சை மையம் ஆகியவைகள் இருந்தன. இவைகளை விற்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு பாஜக ஆளும் வடக்கு தில்லி மாநகராட்சி மூடியதாக இங்கு பணியாற்றிய அலுவலா்களும் ஊழியா்களும் குற்றம் சாட்டுகின்றனா் என அந்த கடிதத்தில் எம்எல்ஏ விஷேஷ் ரவி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.