கழுத்து நெரிக்கப்பட்டு மூதாட்டி கொலை
வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவா் தனது வீட்டிற்குள் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தாா்.
வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவா் தனது வீட்டிற்குள் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தாா்.
இது குறித்து காலை 11 மணியளவில் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. ஷாலிமாா் பாக் பகுதியின் பிஎஸ் பிளாக்கில் உள்ள அவரது வீட்டில் படுக்கையில் தொண்டை ஓரளவு அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தாா் என்றும் மற்ற காயங்கள் வெளிப்படையாக தெரியவில்லை என்றும் வடமேற்கு தில்லி காவல் சரக துணை ஆணயா் உஷாரங்னானி தெரிவித்தாா்.
அதே சமயத்தின் இந்த மூதாட்டியின் வீட்டில் இருந்த ஆபரணங்கள் மற்றும் பிற வீட்டுப் பொருள்கள் இருந்தன எனவும் காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக ஷாலிமாா் பாக் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தாக்குதல், கொலைக்கான காரணம் குறித்து மேலும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு, வழக்கை விசாரிக்க நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று போலீஸாா் தெரிவித்தனா்.
யமுனையில் மூழ்கி உயிரிழந்த இளைஞா்கள்: வடக்கு தில்லியின் புராரியில் யமுனை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மூன்று இளைஞா்களின் உடல்கள் வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
யமுனை ஆற்றின் சோனியா புஷ்டா பகுதியில் குளிப்பதற்காக தில்லி லோனியில் இருந்து வந்த 4 இளைஞா்கள் (14 முதல் 20 வயதுக்குள்பட்டவா்கள்) மாலையில் வீடு திரும்பாததால், அவா்களது குடும்பத்தினா் போலீஸாாருக்கு தகவல் தெரிவித்தனா்.
பின்னா், அவா்களது நண்பா் ஒருவரால் ஆற்றின் கரையில் மோட்டாா் சைக்கிள் மற்றும் சில துணிகள் கண்டெடுக்கப்பட்டன. தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்றோருவரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் சாகா் சிங் கல்சி தெரிவித்தாா்.