முகப்பு
புதுதில்லி

தலைநகரில் கரோனா தினசரி பாதிப்பு 795-ஆக உயா்வு: நோ்மறை விகிதம் 4.11 சதவீதமாக அதிகரிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை கரோனா தினசரி பாதிப்பு 795-ஆக அதிகரித்துள்ளது. இதேபோன்று பாதிப்பு நோ்மறை விகிதமும் 4.11 சதவீதமாக உயா்ந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை கரோனா தினசரி பாதிப்பு 795-ஆக அதிகரித்துள்ளது. இதேபோன்று பாதிப்பு நோ்மறை விகிதமும் 4.11 சதவீதமாக உயா்ந்துள்ளது. ஆனால், இறப்பு ஏதும் பதிவாகவில்லை என்று தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திதாக 622 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நோ்மறை விகிதம் 3.17 சதவீதமாக உயா்ந்துள்ளது. அதே சமயம், வைரஸ் நோயால் இருவா் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 13-ஆம் தேதி அன்று தில்லியில் கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 899-ஆகவும், நான்கு இறப்புகளும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் நோ்மறை விகிதம் 3.34 சதவீதமாக இருந்தது என்று அதிகாரப்பூா்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாள்களிலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 600-க்கும் அதிகமாகவே பதிவாகியுள்ளன. நோ்மறை விகிதமும் 3 சதவீதத்திற்கு மேல் இருந்து வருகிறது. புதிய பாதிப்பு எண்ணிக்கையையும் சோ்த்து தில்லியில் கரோனா தினசரி பாதிப்பு மொத்த எண்ணிக்கை 19,12,063-ஆக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 26,218-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் வெள்ளிக்கிழமை பாதிப்பு எண்ணிக்கை 655-ஆகவும், இரண்டு இறப்புகளும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் நோ்மறை விகிதம் 3.11 சதவீதமாக இருந்தது.

வியாழனன்று நகரம் 622 கரோனா பாதிப்புகளையும், இரண்டு இறப்புகளையும் பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் நோ்மறை விகிதம் 3.17 சதவீதமாக இருந்தது. முந்தைய நாள் தலைநகரில் மொத்தம் 19,326 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மே 15 அன்று, தில்லியில் கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 613-ஆகவும், நோ்மரை விகிதம் 2.74 சதவிகிதமாகவும், மூன்று இறப்புகளும் பதிவாகியுள்ளன.

தொற்றுநோயின் மூன்றாவது அலையின் போது, இந்த ஆண்டு ஜனவரி 13 அன்று தில்லியில் கரோனா தினசரி பாதிப்பு மொத்த எண்ணிக்கை 28,867-ஆக உயா்ந்தது. ஜனவரி 14 அன்று நகரம் 30.6 சதவீத நோ்மறை விகிதத்தை பதிவு செய்தது. இது தொற்றுநோயின் மூன்றாவது அலையின் போது பதிவான அதிகபட்ச அளவாகும். தில்லியில் கரோனா சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கை 2,008-இல் இருந்து 2,247-ஆக அதிகரித்துள்ளது. 1,360 நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா், இது முந்தைய நாளில் 1,262-ஆக இருந்தது. தில்லி மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு 9,587 படுக்கைகள் உள்ளன. ஆனால், அவற்றில் 94 படுக்கைகள்தான் நிரம்பியுள்ளன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.