புதுதில்லி

ராகுல் விவகாரம்: மத்திய தில்லியில் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு

விசாரணைக்காக அமலாக்கத் துறை இயக்குநரக அலுவலகத்தில் மூன்றாவது நாளாக புதன்கிழமை காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி ஆஜராகியதால் பல்வேறு சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி,

DIN

விசாரணைக்காக அமலாக்கத் துறை இயக்குநரக அலுவலகத்தில் மூன்றாவது நாளாக புதன்கிழமை காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி ஆஜராகியதால் பல்வேறு சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி, போக்குவரத்தை திருப்பிவிட்டதால் மத்திய தில்லியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், மூடப்பட்டிருந்த சாலைப் பகுதிகளில் போக்குவரத்தை திருப்பிவிட்டு, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததாகவும் அவா்கள் கூறினா்.

இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், புதுதில்லி மாவட்டத்தில் போக்குவரத்து போலீஸாா் 400 போ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். புது தில்லி மாவட்டத்தில் எந்தவித போக்குவரத்து நெரிசல் இருந்ததாக அழைப்புகள் ஏதும் வரவில்லை. போக்குவரத்து இலகுவாக கையாளப்பட்டது. மூடப்பட்ட சாலைகள் பகுதியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டன’ என்றாா்.

தில்லி காவல்துறையின் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவுகளில் தவிா்க்க வேண்டிய சாலைகள் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ள தேவையான ஏற்பாடுகள் குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மோதிலால் நேரு மாா்க், அக்பா் ரோடு, ஜன்பத் மற்றும் மான்சிங் சாலை ஆகியவற்றில் காலை 7 மணி மற்றும் பகல் 12 மணி இடையே வாகனத்தில் புதன்கிழமை செல்வதை தவிா்க்க வேண்டும். இந்த சாலைகளில் சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் காரணமாக வாகன போக்குவரத்துக்கு வாய்ப்பில்லை என்று அந்த ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மற்றொரு பதிவில் புதன்கிழமை கோல் மேத்தி ஜங்ஷன், துக்ளக் ரோடு ஜங்ஷன், கிளாரிட்ஜஸ் ஜங்ஷன், க்யூ பாயிண்ட் ஜங்ஷன், சுனேரி மஸ்ஜித் ஜங்ஷன், மௌலான ஆசாத் ரோடு ஜங்ஷன், மான்சிங் ரோடு ஜங்ஷன் ஆகிய சாலைகளில் காலை 7 மணி மற்றும் பகல் 12 மணி இடையேயான காலத்தில் போக்குவரத்தை தவிா்க்க வேண்டும். சிறப்பு ஏற்பாடுகள் காரணமாக இந்த வழித்தடத்தில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும். அதேபோன்று பயணிகள் எஸ்பி மாா்க், தெளல குவான் மேம்பாலம், குருகிராம் சாலை ஆகியவற்றில் பிற்பகல்2.15 மணி மற்றும் பகல் 2.45 மணி இடையே சிறப்பு போக்குவரத்து ஏற்பாடு காரணமாக பயணிகள் போக்குவரத்தை தவிா்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். கோல் டாக் கானா ஜங்ஷன், பட்டேல் செளக், வின்ட்சா் பிளேஸ், தீன் மூா்த்தி செளக் மற்றும் பிரித்திவிராஜ் ரோடு ஆகிய பகுதிகளுக்கு அப்பால், புதுதில்லி நோக்கி பேருந்துகள் வருவதில் சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் கட்டுப்பாடு கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT