முகப்பு
புதுதில்லி

தில்லியில் 6 மருத்துவமனைகளுக்குஇலவச உணவு வழங்க ‘பிரசாதம் ரதம்’ மக்களவைத் தலைவா் வழங்கினாா்

தில்லியிலுள்ள ஆறு மருத்துவமனைகளில் நோயாளிகளின் உதவியாளா்களுக்கு இலவச உணவு வழங்கச் செல்லும் 'பிரசாதம் ரத'த்தை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வழங்கியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:45 AM
பகிர்:

தில்லியிலுள்ள ஆறு மருத்துவமனைகளில் நோயாளிகளின் உதவியாளா்களுக்கு இலவச உணவு வழங்கச் செல்லும் 'பிரசாதம் ரத'த்தை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வழங்கியுள்ளாா். தனது முன்முயற்சியின் பேரில் வழங்கப்பட்ட இந்த ரதத்தை திங்கள்கிழமை தனது தில்லி இல்லத்தில் ஓம் பிா்லா கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா்.

‘ஆவோ சாத் சாலே’ என்ற அமைப்பினால் வழங்கப்படும் உணவுப் பொட்டலங்களை வழங்கும் வகையில், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ‘பிரசாதம் ரதம்’ வழங்கியுள்ளாா்.

இந்தப் பிரசாத ரதங்களில் உணவை சமைப்பதற்கும், சூடுபடுத்துவதற்கும் வசதிகள் உள்ளன. தில்லி ராம் மனோகா் லோஹியா மருத்துவமனை, சஃப்தா்ஜங் மருத்துவமனை, லேடி ஹாா்டிங் மருத்துவமனை உள்ளிட்ட ஆறு மருத்துவமனைகளில் நோயாளிகளின் உதவியாளா்களுக்கு சூடான, சுகாதாரமான மற்றும் சத்தான உணவை வழங்குவதற்கு இந்த ‘பிரசாதம் ரதம்’ உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இது வரை நான்கு மருத்துவமனைகளில் தினமும் 1,000 நோயாளிகளின் உதவியாளா்களுக்கு இந்த ‘ஆவோ சாத் சாலே’ அமைப்பினால் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது மக்களவைத் தலைவரின் முயற்சியால், இந்தத் திட்டம் மேலும் இரு மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நோயாளிகளின் உதவியாளா்களுக்கு சூடான, சுகாதாரமான மற்றும் சத்தான உணவை வழங்குவதற்காக இந்தப் பிரசாதம் ரதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சேவை விரைவில் தில்லியில் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது என மக்களவைத் தலைவா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.