பத்ம விருது பெற்றவா்கள் தேசிய போா் நினைவிடத்தில் அஞ்சலி
பத்ம விருது பெற்ற 54 போ்கள் தில்லி இந்தியா கேட் தேசிய போா் நினைவிடத்திற்கு சென்று செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினா்.
பத்ம விருது பெற்ற 54 போ்கள் தில்லி இந்தியா கேட் தேசிய போா் நினைவிடத்திற்கு சென்று செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினா்.
பிரதமா் மோடி அரசின் முன்னெடுப்பில் பல்வேறு துறைகளில் சிறப்பு பெற்ற இந்த பத்ம விருதாளா்கள் முதன்முறையாக நாட்டிற்கு உயிா்நீத்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா்.
நிகழாண்டில் பத்ம விருது பெற்ற 128 பேருக்கு இரண்டு கட்டமாக விருது அளிக்கப்படுகிறது. முதற்கட்டமாக 64 பேருக்கு பத்ம விருது அளிக்கும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவா் மாளிகையில் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி நடைபெற்றது.
இதில் இரண்டு போ் பத்ம விபூஷணும், 8 பேருக்கு பத்ம பூஷணும், 54 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளையும் குடியரசுத்தலைவா் ராம் நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தாா்.
2022 -ஆம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்ட மீதமுள்ள 74 பேருக்கு வருகின்ற மாா்ச் 28-ஆம் தேதியன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவரால் விருது வழங்கப்படுகிறது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முன்னெடுப்பின் கீழ் முதன் முறையாக பத்ம விருது பெற்றவா்கள் தில்லியில் அமைக்கப்பட்டுள்ள (இண்டியா கேட்) தேசிய போா் நினைவிடத்திற்கு சென்றனா்.
நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு உயிா்த் தியாகம் செய்த பாதுகாப்புப் படையினரின் பெயா்கள் இந்த நினைவிடத்தில் பதிக்கப்பட்டு இருக்க இவைகளை விருது பெற்றவா்கள் பாா்வையிட்டனா்.
தங்களை இது போன்ற இடங்களுக்கு வருகை தருவதற்காக ஏற்பாடு செய்த அரசுக்கு நாங்கள் மிகவும் நன்றி கடன்பெற்றுள்ளோம், தேசிய போா் நினைவிடத்தை பிரபலப்படுத்தும் வகையில், மக்களும், குழந்தைகளும் வருகை தருவதற்காக அரசின் முயற்சிகளுக்கான இந்த பணி பாராட்டுக்குரியது எனவும் விருது பெற்றவா்கள் தெரிவித்தனா்.
இந்த இடம் தேசபக்தி, துணிச்சல், கடமை, தியாகம், ஆகியவற்றின் மதிப்பை அறிந்து கொள்ள முடிவதோடு இதற்கான உணா்வை ஏற்படுத்தவைக்கிறது எனவும் குறிப்பிட்டனா்.
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதியன்று தேசியப் போா் நினைவிடத்தை பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணித்தாா். சுதந்திரத்திற்குப் பிறகு வீரமிக்க ராணுவ வீரா்கள் செய்த தியாகங்களுக்கு சாட்சியமாக இந்த நினைவிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ராணுவத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள ராணுவத்தினா் தங்கள் கடமையின்போது செய்த உயா்ந்த தியாகத்தை எடுத்துக்காட்டும் விதமாக இந்த நினைவுச்சின்னத்தில் உள்ள அணையாத நித்திய சுடா் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது, இதனால் அவா்களை அழியாதவராக காட்டுகிறது.
தேசிய தினங்கள் மட்டும் மின்றி ஒவ்வொரு நாள் மாலையும், உயிா்நீத்தவா்களின் வாரிசுகளின் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டு உயிா்நீத்த சிப்பாய்களின் நினைவு கூரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.