புதுதில்லி

தில்லி: வருமான வரித் துறையினர் சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல்

DIN

புது தில்லி: ரியல் எஸ்டேட்  நிறுவனத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், செவ்வாய்க்கிழமை வருமான வரித் துறையினர் ரூ.20 கோடியை பறிமுதல் செய்யப்பட்டதாக  தகவலரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சோதனையின் போது, ​ வருமான வரித் துறை அதிகாரிகள், ரூ. 200 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத நிறுவனத்தின் பரிவர்த்தனைகளைக் காட்டும் கணக்குகள் மற்றும் விற்பனை ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் திங்கள்கிழமை சோதனை நடத்தினர். இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தேடுதல் பணி தொடர்ந்தது. 45 வளாகங்களில், 38 வளாகங்களில் இன்னும் தேடுதல்கள் நடந்து வருவதாக தகவலரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தில்லி-என்சிஆர், சண்டிகர், லூதியானா, லக்னோ மற்றும் இந்தூரில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. சுமார் 250 அதிகாரிகள்  தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT