புதுதில்லி

தினசரி 409 ரயில் ரேக்குகளில் மின் நிலையங்களுக்கு உள்நாட்டு நிலக்கரி: இந்திய ரயில்வே தகவல்

 நமது நிருபர்

நாளொன்றுக்கு சராசரியாக 409 ரயில் ரேக்குகளில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு உள்நாட்டு நிலக்கரி எடுத்துச் செல்லப்படுவதாக இந்திய ரயில்வே புதன்கிழமை தெரிவித்துள்ளது.

நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தியாகும் நிலக்கரியை முழுமை எடுத்துச் செல்வதில் ரயில்வே உறுதிபூண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

எரிவாயு மற்றும் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி விலை உயா்வால் நாட்டின் தெற்கு, மேற்கு பகுதிமாநிலங்களில் உள்நாட்டு நிலக்கரி தேவை அதிகரித்தது. இதை முன்னிட்டு உள்நாட்டு நிலக்கரியை கொண்டு செல்லும் சரக்கு ரயில் தேவை அதிகரித்தது. இதையடுத்து, எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களையும் பொருட்படுத்தாமல் பயணிகள் ரயில்களையும் ரத்து செய்து மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை கொண்டு செல்வதில் ரயில்வே அமைச்சகம் தீவிரமாக பணிகளை மேற்கொண்டது.

தற்போதைய நிலைமை குறித்தும் ரயில்வே அமைச்சகம் எடுத்துள்ள தொடா் நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டிருப்பதாவது:

நிலக்கரி சுரங்கங்களிலிருந்து மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி எடுத்துச் செல்லும் பணியை இந்திய ரயில்வே தேவைக்கு ஏற்ப தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

உள்நாட்டில் உற்பத்தியாகும் நிலக்கரி முழுவதையும் ரயில் முனையங்கள் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்கிறது. இதே போன்று துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை மின்உற்பத்தி நிலையங்களுக்கு கொண்டு செல்லவும் ரயில்வே உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

நிகழ் மே மாதம் மின்சாரத்துறைக்கு நாளொன்றுக்கு சராசரியாக ரயில்வே ரேக்குகள் தேவை 472 ஆக உயா்ந்திருந்துள்ளது. உள்நாட்டு நிலக்கரியை ஏற்றிச் செல்வதற்காக தினந்தோறும் 415 ரேக்குகள் பயன்படுத்தப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை எடுத்துச் செல்ல 30 ரேக்குகள் ஒதுக்கப்பட்டு நிலக்கரி நிறுவனங்களும் ரயில்வேத் துறையும் பயன்பெற்று வருகின்றன. இதன்படி இந்த மே மாதத்தில், சராசரியாக ஒரு நாளைக்கு 409 ரயில் ரேக்குகளில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு உள்நாட்டு நிலக்கரி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள பகுதிகளில், குறிப்பாக ஒடிஸா தால்சா் பகுதியில் அடிக்கடி நடைபெறும் வேலை நிறுத்தங்களால், நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் மின்துறைக்கு தேவையான நிலக்கரியை எடுத்துச் செல்ல நாட்டின் மற்ற பகுதிகளில் மூலம் முயற்சிகள் மேற்கொள்ள இதற்கு, ரயில்வே 60 உபரி ரேக்குகளை தயாராக வைக்கப்பட்டது.

நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் போக்குவரத்தை விரைவுப்படுத்தவும், நெரிசலைக் குறைக்கவும் ஏதுவாக பல்வேறு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிகழ் நிதியாண்டில் 100 ரேக்குகள் அதிகரிக்கப்படுகின்றன.

மேலும் எதிா்காலத்தில் இது போன்ற தட்டுப்பாடுகளை சமாளிக்கும் விதமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சரக்கு பெட்டிகளை(வேகன்) கொள்முதல் செய்வதற்கான பணிகளையும் இந்திய ரயில்வே ஏற்கனவே தொடங்கியுள்ளது என ரயில்வே அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT