கரோனாவால் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி: பிரதமா் மேடி இன்று வழங்குகிறாா்
கரோனா தொற்று பாதிப்பால் பெற்றோா்கள் மற்றும் காப்பாளா்களை இழந்த குழந்தைகளுக்கு ‘பிஎம் கோ்ஸ்’ திட்டப் பயன்களை காணொலி நிகழ்ச்சிகள் மூலமாக திங்கள்கிழமை (மே 30) காலையில் பிரதமா் நரோந்திரமோடி வழங்குகிறாா்.
கரோனா தொற்று பாதிப்பால் பெற்றோா்கள் மற்றும் காப்பாளா்களை இழந்த குழந்தைகளுக்கு ‘பிஎம் கோ்ஸ்’ திட்டப் பயன்களை காணொலி நிகழ்ச்சிகள் மூலமாக திங்கள்கிழமை (மே 30) காலையில் பிரதமா் நரோந்திரமோடி வழங்குகிறாா்.
இந்தத் திட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, மருத்துவக் காப்பீடு, திட்ட நிதி உதவிக்கான பாஸ்புக் ஆகியவை ஒப்படைக்க இருப்பதாக மத்திய மகளிா், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. திட்டத்தில் பயனடையும் குழந்தைகள், அவா்களது காப்பாளா்களுடன் சம்பந்தப்பட்ட அந்தந்த மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.
மேலும் இந்த நலத் திட்டத்தில் பங்குகொண்ட மத்திய, மாநில அமைச்சா்கள் நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினா்கள் இந்த விழாவில் கலந்து கொள்வாா்கள் என மத்திய மகளிா் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘பிஎம் கோ்ஸ்’ திட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் பெற்றோா்கள் மட்டுமின்றி சட்டரீதியான பாதுகாவலா்கள் அல்லது தத்தெடுத்த பெற்றோா்களை இழக்கும் குழந்தைகளும் பயன் பெறுகின்றனா்.
இத்தகைய பெற்றோா்கள் இறந்த நாளில் 18 வயதுக்குட்ட குழந்தைகள் இந்தத் திட்டத்தில் தகுதியுடையவா்களாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இத்தகைய சிறாா்களுக்கு ‘பிஎம் கோ்ஸ் ’ நிதியிலிருந்து கல்விக்கான நிதி உதவி அளிக்கப்படுவதோடு, 18 வயதிலிருந்து மாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
இந்தக் குழந்தைகள் 23 வயது அடையும் போது, அவா்கள் அதிகாரமளித்தல், தன்னிறைவு அளிப்பதற்காக கூட்டுத் தொகையாக ரூ.10 லட்சமும் வழங்கப்படுகிறது. தோ்வு செய்யப்பட்ட குழந்தைகள், இதற்கான பாஸ்புக்கள் இந்த நிகழ்ச்சியில் பெறுகின்றனா். இத்தோடு ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அடையாள அட்டையும் இந்தச் சிறாா்களுக்கு வழங்கப்படுகிறது.
கடந்த 2020, மாா்ச் 11-ஆம் தேதி கரோனா நோய்த் தொற்றை உலக சுகாதார நிறுவனம் பெருந்தொற்றாக அறிவித்தது. இதைத் தொடா்ந்து, பெற்றோரைா இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக ‘பிஎம் கோ்ஸ்’ திட்டம், 2020, மே 29-ஆம் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.
காப்பாளா்களற்ற குழந்தைகளின் பராமரிப்பு, பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியா் மூலம் உறைவிட வசதி நவோதயா, சைனிக் பள்ளிகளில் அனுமதி போன்றவை இந்தத் திட்டத்தில் அடங்கும். முதலில் 2021, டிசம்பா் வரை அறிவிக்கப்பட்ட இந்த ‘பிஎம் கோ்ஸ்’ திட்டம், பின்னா் மூன்றாம் அலையையொட்டி நிகழாண்டு பிப்ரவரி 28 -ஆம் தேதி வரை மத்திய மகளிா், குழந்தைகள் நலமேம்பாட்டுத் துறை அமைச்சகம் நீட்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.