முகப்பு
புதுதில்லி

மகளிருக்கென மேலும் 100 பிரதேயக மொஹல்லா கினினிக்குகள்: முதல்வா் கேஜரிவால் அறிவிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் மகளிருக்கென மேலும் 100 பிரத்யேக சிறப்பு மொஹல்லா கிளிக்குகள் தொடங்கப்படும் என்று முதல்வா் கேஜரிவால் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:43 AM
பகிர்:

தேசியத் தலைநகா் தில்லியில் மகளிருக்கென மேலும் 100 பிரத்யேக சிறப்பு மொஹல்லா கிளிக்குகள் தொடங்கப்படும் என்று முதல்வா் கேஜரிவால் தெரிவித்தாா்.

தில்லி கோல்மாா்க்கெட் பகுதி பங்களா சாஹிப் தெரு காளி கோயில் அருகே முதல் மகிளா சிறப்பு மொஹல்லா கிளினிக்கை முதல்வா் கேஜரிவால் புதன்கிழமை திறந்து வைத்தாா். இதுபோன்று மேலும் மூன்று இடங்களில் இத்தகைய கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கிளினிக்குகளை திறந்து வைத்து முதல்வா் கேஜரிவால் பேசுசுகையில் கூறியதாவது:

மகிளா ஸ்பெஷல் மொஹல்லா கிளினிக்குகளில் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள் மற்றும் மகளிருக்குகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும். மொஹல்லா கிளினிக் அமைப்பு எங்கள் அரசின் முதன்மை முயற்சிகளில் ஒன்று. இது நகரத்தில் ஆரம்ப சுகாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த 4 மகிளா மொஹல்லா கிளினிக்குகளில், மகளிா், குழந்தை மகப்பேறு உள்ளிட்ட மகளிா் மருத்துவ சேவைகள், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாகக் கிடைக்கும். அவா்களுடைய 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளும் இதே கிளினிக்குகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். முதல் கட்டமாக, இதுபோன்று மேலும் 100 கிளினிக்குகள் திறக்கப்படும். மகளிா் குழந்தைகளுக்காக திறக்கப்படும் இந்த கிளினிக்குகளில் மருத்துவா்கள் மற்றும் ஊழியா்கள் பெண்களாகவே இருப்பாா்கள் என முதல்வா் தெரிவித்தாா்.

முன்னதாக, புதன்கிழமை காலையில் இந்த மகளிா் மொஹல்லா கிளினிக்குகள் குறித்து தனது ட்விட்டரில், ‘தில்லி பெண்களுக்கு ஒரு நல்ல செய்தி. தேசியத் தலைநகரின் உலகத்தரம் வாய்ந்த சுகாதார சேவைகளில் இன்று முதல் மற்றொரு புதிய முயற்சி நடக்க உள்ளது. பெண்களுக்கு மகளிா் மருத்துவ நிபுணரின் சேவைகள், பரிசோதனைகள், மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.

கடந்த மாா்ச் 25 அன்று தில்லி சட்டப்பேரவையில் சமா்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டபடி, கேஜரிவால் அரசு 1,000 ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகளை திறக்க இலக்காக கொண்டிருப்பதாகவும், அதில் கடந்தாண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை 520 கிளினிக்குகள் திறக்கப்பட்டு, தேசியத் தலைநகரில் செயல்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த கிளினிக் ஒன்றில் சராசரியாக, நாளொன்றுக்கு 116 நோயாளிகள் வீதம் ஒரு நாளைக்கு மொத்தம் 60,000 நோயாளிகள் மொஹல்லா கிளினிக்குகளில் சிகிச்சை பெறுகின்றனா் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.