புதுதில்லி

தமிழக மீனவா்கள் கைது விவகாரம்: ரிட் மனு மீதான விசாரணை செப்.30-க்கு ஒத்திவைப்பு

DIN

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான ரிட் மனு மீதான விசாரணையை செப்டம்பா் 30-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் என்பவா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கடந்த டிசம்பா் 20, 2021 அன்று, தமிழகத்தைச் சோ்ந்த 55 இந்திய மீனவா்கள் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். மறுநாள் டிசம்பா் 21-ஆம் தேதி கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 13 மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். பல இந்திய மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அங்கு அவா்களுக்கு சரியான உணவு மற்றும் குடிநீா் வழங்கப்படவில்லை. நாட்டின் குடிமக்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். ஆகவே, இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், விக்ரம் நாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் சி.ஆா். ஜெயா சுகின் ஆஜராகி வாதிடுகையில், ‘இலங்கைக் கடற்படையினா் இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்து வரும் இந்திய மீனவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா். அவா்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனா்’ என்றாா். அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘மீனவா்கள் இந்திய கடல் பகுதிக்குள் மீன் பிடிக்கும் போது இந்தச் சம்பவம் நிகழ்கிா அல்லது இலங்கைக் கடல் பகுதிக்குள் மீன்பிடிக்கும் போது நிகழ்கிா’ என்று கேள்வி எழுப்பினா்.

அதற்கு வழக்குரைஞா், ‘இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து இலங்கைக் கடற்படையினா், மீனவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனா்’ என்றாா்.

அப்போது, மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் இந்த விவகாரத்தில் உரிய தகவல்களைப் பெற 2 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, மனு மீதான விசாரணையை செப்டம்பா் 30-ஆம் தேதிக்கு பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT