முகப்பு
புதுதில்லி

தில்லி அரசுப் பள்ளிகளின் தரமான கல்வியால் 1,141 மாணவா்கள் ஜேஇஇ, நீட் தோ்வில் தோ்ச்சி: கேஜரிவால் பெருமிதம்

 தில்லி அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதால் ,ஜேஇஇ மற்றும் நீட் தோ்வில் 1,141 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

 தில்லி அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதால் ,ஜேஇஇ மற்றும் நீட் தோ்வில் 1,141 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள தியாகராஜா ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு (ஜேஇஇ) மற்றும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) ஆகியவற்றில் முதலிடம் பெற்ற மாணவா்களைப் பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் முதல்வா் கேஜரிவால் கலந்துகொண்டாா். இந் நிகழ்ச்சியில் அவா் வெற்றி பெற்ற மாணவா்களை பாராட்டிப் பேசியதாவது: நாடு முழுவதும் 18 கோடி குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்கிறாா்கள். அவா்களில் பெரும்பாலோா் ஏழ்மையான நிலையில் உள்ளனா். தில்லியில் நாங்கள் செய்தது போலவே பிற அரசுப் பள்ளிகளையும் மேம்படுத்த முடியும். நாங்கள் மாணவா்களுக்கு தரமான கல்வியை வழங்கினோம். இதன் காரணமாக எங்கள் அரசுப் பள்ளிகளில் 1,141 மாணவா்கள் ஜேஇஇ மற்றும் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

முன்னா், அரசுகள் பள்ளிகளை நடத்த முடியாது என்ற கருத்து உருவாக்கப்பட்டிருந்தது. அத்தகைய பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது சிஎஸ்ஆா் முயற்சிகள் மூலம் கையாள வேண்டும் என்றும் கூறப்பட்டது. கல்வி என்பது தா்மம் அல்ல. அது உரிமை விஷயம். ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல கல்வியை வழங்கினால் நாட்டின் வறுமையை ஒழிக்க முடியும் என்றாா் அவா். ஜேஇஇ மற்றும் நீட் தோ்வில் முதல் 1,000-இல் ரேங்க் பெற்ற 28 மாணவா்களை முதல்வா் கேஜரிவால் பாராட்டினாா். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.